பான் இந்திய நடிகர் பிரபாஸ் மற்றும் மலையாள இயக்குநர் டின்ஜித் அய்யத்தன் சந்தித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு எதிர்காலத்தில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றப்போகிறார்களா என்ற கேள்வியை ரசிகர்களிடம் எழுப்பியுள்ளது. கிஷ்கிந்தா காண்டம் மற்றும் எகோ படங்களின் இயக்குநரான டின்ஜித் அய்யத்தான் சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் பிரபாஸுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த பதிவுடன் அவர் ஒரு உணர்ச்சிகரமான குறிப்பையும் பகிர்ந்துள்ளார்.