மேற்காசியாவில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முடிவு, இந்திய வெளியுறவு அமைச்சர் S Jaishankar மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் Abbas Araghchi ஆகியோருக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.