தி கோர்ட் பட நடிகையின் புது தமிழ் படம்.. வெளியானது டைட்டில் லுக் போஸ்டர்!
Aegan And Sri Devis New Movie: தென்னிந்திய சினிமாவில் குறிப்பாக தெலுங்கு மொழியில் வெளியாகி மிக பிரபலமான படம்தான் தி கோர்ட் ஸ்டேட் விஸஸ் நோபடி. இந்த படத்தில் இளம் கதாநாயகியாக நடித்திருந்த தெலுங்கு நடிகை ஸ்ரீதேவி. இவரின் புது தமிழ் படத்தின் டைட்டில் லூத் போஸ்டர் வெளியாகியுள்ளது.
கடந்த 2025 மார்ச் மாதத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்றிருந்த படம்தான் தி கோர்ட் ஸ்டேட் விஸஸ் நோபடி (The Court State vs Nobody). இந்த படத்தை இயக்குநர் ராம் ஜெகதீஷ் (Ram Jagadeesh) இயக்க, நடிகர் நானி (Nani) தயாரித்திருந்தார். இந்த படத்தில் நடிகர்கள் ஸ்ரீ தேவி (Sri Devi), ரோகினி, ஹர்ஷ் ரோஷன் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது இளம் வயதினரின் காதல் தொடர்பான கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இப்படம் தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழிலும் வெளியாகி ஹிட்டடித்திருந்தது. இந்த படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானவர்தான் நடிகை ஸ்ரீதேவி. இவர் இந்த படத்தை அடுத்ததாக தமிழில் தயாரிப்பாளர் கேஜேஆர். ராஜேஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நிலையில், தற்போது மேலும் ஒரு தமிழ் படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.
இவர் கோழிப்பண்ணை செல்லத்துரை, ஜோ போன்ற படங்களில் நடித்த ஏகன் (Aegan) ஹீரோவாக நடிக்கும் புது படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவி நடிக்கவுள்ளார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு படக்குழு “ஹைக்கூ” (Haiku) என டைட்டில் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




இதையும் படிங்க: என்னப்பா ஆரம்பிக்கலாமா? மலேசியாவில் கார் ரேஸிற்கு தயாராகிவரும் அஜித் குமார்.. வைரலாகும் வீடியோ!
ஏகன் மற்றும் ஸ்ரீதேவியின் ஹைக்கூ திரைப்படத்தின் டைட்டி லூத் போஸ்டர் பதிவு :
Such a warm, positive and lively first look from team #Haiku! ✨
Aegan shows a drastic shift in characterisation after Kozhipanna Chelladurai – a promising new chapter ahead.
Sri Devi marks her Kollywood debut opposite to him, and this fresh pairing of youngsters already feels… pic.twitter.com/XabKi6y7IS— Ramesh Bala (@rameshlaus) December 5, 2025
இந்த அறிமுக இயக்குநர் யுவராஜ் சின்னசாமி இயக்க, விஜய் புக்கனின் இசையமைத்து வருகிறார். மேலும் இந்த படத்தை விஷன் சினிமா என்ற தயாரிப்பு நிறுவனமானது தயாரித்து வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே தொடங்கிய நிலையில், தற்போது இப்படத்தின் டைட்டில் லுக்கை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படமானது முழுக்க காதல், அதனால் உருவாகும் பிரச்னைகள் தொடர்பான கதைக்களத்தில் தயாராகிவருகிறதாம்.
இதையும் படிங்க: காமெடி பண்ணா டைட்டில் வின்னர் பட்டத்தை தூக்கி கொடுக்கனுமா? கானா வினோத் குறித்து கருத்தை முன் வைத்த ஆதிரை!
இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் 3 மாதங்களுக்குள் முடிவடைந்துவிடும் என்ற நிலையில், வரும் 2026ம் ஆண்டு கோடைக் காலத்தில் இப்படம் வெளியாகுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை அடுத்ததாக இளம் நடிகை ஸ்ரீதேவி மேலும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் கமிட்டாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஹைக்கூ படமானது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.