காமெடி பண்ணா டைட்டில் வின்னர் பட்டத்தை தூக்கி கொடுக்கனுமா? கானா வினோத் குறித்து கருத்தை முன் வைத்த ஆதிரை!
Bigg Boss Tamil Season 9: தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமான ரியாலிட்டி பிக் பாஸ் சீசன் 9 தமிழ். இந்த நிகழ்ச்சியானது கிட்டத்தட்ட தொடங்கி 61வது நாளை கடந்துள்ளது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோ ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது. இது குறித்து விவரமாக பார்க்கலாம்.
பான் இந்திய மொழிகளில் வெளியாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என பல்வேறு மொழிகளில் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இந்த 2025ம் ஆண்டில், ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ் சீசன் 9 தமிழ் (Bigg Boss Season 9 Tamil). இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi)தொகுத்து வழங்கிவருகிறார். மேலும் இதற்கு முன் வெளியான பிக் பாஸ் சீசன் 8 வரை உலகநாயகன் கமல்ஹாசன் குறிப்பிடத்தக்கது. இந்த பிக் பாஸ் 9 தமிழ் கடந்த 2025 அக்டோபர் 5ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இன்று 2025 டிசம்பர் 5ம் தேதியோடு தொடங்கி 2 மாதங்களை நிறைவு செய்துள்ளது. இந்நிகழ்ச்சி 20 மற்றும் 4 வைல்ட் கார்ட் என்டரிஸ் என மொத்தம் 24 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது மொத்தமாக 16 போட்டியாளர்கள் இருந்துவருகின்றனர்.
இந்நிலையில் இன்று 61வது நாளில் வெளியான முதல் புரோமோவில் கானா வினோத் (Gana Vinoth) குறித்து ஆதிரை (Aadhirai) கூறிய கருத்து ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதிரை, ” கானா வினோத் நல்ல காமெடி பண்ணுகிறார் என்ற காரணத்தினால் வின்னர் என்ற பட்டத்தை தூக்கி கொடுக்க முடியாது” என கூறியுள்ளார்.




இதையும் படிங்க: தலைவர் 173 படத்திற்கு அனிருத் இசையமைக்கவில்லையா? இவர்தான் இசையமைக்கிறாரா?
பிக் பாஸ் சீசன் 89 தமிழ் நிகழ்ச்சியின் 61வது நாளின் முதல் புரோமோ பதிவு :
#Day61 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/sO3LPmS6Rn
— Vijay Television (@vijaytelevision) December 5, 2025
இந்த புரோமோவில் பிக் பாஸ் வீட்டில் கடைசி வரை இருக்கும் 2 போட்டியாளர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதில் பலரும் விக்கல்ஸ் விக்ரம், கானா வினோத், சான்ட்ரா மற்றும் விஜே பார்வதியை கூறியிருந்தனர். இவர்களின் கருத்தை கூறிய பின் கடைசியாக வந்து பேசிய ஆதிரை, “கானா வினோத் காமெடி பண்ணுகிறார், என்பதால் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை கொடுக்கமுடியாது” என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அனிருத் என்னை காபாத்திட்டியானு பாக்குறாரு.. மேடையில் கலகலப்பாக பேசிய ஏ.ஆர். ரஹ்மான்!
இது தற்போது கானா வினோத்தின் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான ஆதிரை குறித்து அவர்கள் இணையத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆதிரை ஏற்கனவே போட்டியாளராக வெளியே சென்று, பின் வைல்ட் கார்ட் என்டரியாக மீண்டும் உள்ளே நுழைந்துள்ள நிலையில், அவர் வைல்ட் கார்ட் என்டரியாக வந்ததே தேவையில்லை எனவும் அவர் குறித்த கருத்து இணையத்தில் உலாவி வருகிறது.