மீண்டும் மீண்டுமா? கம்ருதீனால் தொடரும் பிரச்னை… FJ-யிடம் கண்ணீருடன் சண்டையிட்ட பார்வதி!
Bigg Boss Tamil Season 9: தமிழில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்துவருகிறது. இந்த நிகழ்ச்சியானது தொடங்கி கிட்டத்தட்ட 60 நாட்களாகிவிட்டடித்து. இந்நிலையில் இன்று வெளியான புரோமோவில் பிக் பாஸ் வீட்டில் மீண்டும் பிரச்சனை வெடித்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
இந்த பிக் பாஸ் சீசன் 9 தமிழ் (Bigg Boss Season 9 Tamil) நிகழ்ச்சியானது மற்ற சீசன்களை ஒப்பிடும்போது எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதுவரை வெளியான பிக் பாஸ் தமிழ் (Bigg Boss Tamil) சீசன்களில் இதன் மோசமான சீசன் என ரசிகர்களாலும் தங்களின் கருத்துக்களை ஊடகங்களில் பதிவிட்டுவருகின்றனர். அந்த வகையில் இந்த பிக் பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியானது கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி முதல் மிக பிரம்மாண்டமாக ஆரம்பமானது. சுமார் 20 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்நிகழ்ச்சி முதல் நாளிலிருந்தே சண்டை தொடங்கிவிட்டது என்றே கூறலாம்.
அந்த வகையில் இந்த சீசன் நிகழ்ச்சியில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்நிகழ்ச்சியை விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்து வரும் நிலையில், கிட்டத்தட்ட பலமுறை போட்டியாளர்களை எச்சரித்து வந்தார். அந்த வகையில் சமீபத்தில் ஜமீன்தார் டாஸ்க் நடைபெற்றுவந்த நிலையில் கிட்டத்தட்ட 3 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்தது. இதில் பல பிரச்னைகள் எழுந்த நிலையில், கம்ருதீன் (Kamruddin) மற்றும் வி.ஜே. பார்வதியை (VJ Parvahy) பிக் பாஸ் எச்சரித்திருந்தார்.




இதன் காரணமாக மீண்டும் வீட்டில் சண்டையானது தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று 2025 டிசம்பர் 4ம் தேதியில் வெளியான முதல் புரோமோவில், கம்ருதீன் FJ மற்றும் வி.ஜே. பார்வதி என மூவருக்குள்ளும் புதிய பிரச்னை கிளம்பியுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: பராசக்தி பட ஆடியோ லான்ச் எப்போது? அட இந்த பிரபலங்கள் தான் கெஸ்ட்-ஆ?
பிக் பாஸ் சீசன் 9 தமிழ் 60வது நாளின் முதல் புரோமோ :
#Day60 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/2DAtaVQ0nE
— Vijay Television (@vijaytelevision) December 4, 2025
இந்த் புரோமோவில் FJ தனது கருத்தை முன்வைத்தார். இதில் கடுப்பான கம்ருதீன் அவரிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். மேலும் பேசும்போதே பார்வதியை உள்ளே இழுத்த FJ, அவரை பற்றி பேசியிருந்தார். தன்னை பதறி எந்தவிதத்திலும் பேசவேண்டாம் என பார்வதி கோபத்துடன் பேசியிருந்தார்.
இதையும் படிங்க: தொடர் மழை காரணமாக ரிலீஸ் தேதியை ஒத்திவைத்த லாக்டவுன் படக்குழு!
மேலும் பேசும்போதே பார்வதி அழுத்துவிட்டார். என்னை பற்றி எதுவும் பேசாதீர்கள், நான் எப்படி என எனக்கு தெரியும் என அவர் தெரிவித்திருந்தார். ஏற்கனவே பார்வதி மற்றும் கம்ருதீன் மைக்கை மறைத்து பேசுவதாக பிக் பாஸ் எச்சரித்த நிலையில், இந்த பிரச்சனை மேலும் அவர்களிடம் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.