Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Parasakthi: பராசக்தி பட ஆடியோ லான்ச் எப்போது? அட இந்த பிரபலங்கள் தான் கெஸ்ட்-ஆ?

Parasakthi Audio launch: நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாராகிவரும் படம்தான் பராசக்தி. இந்த படமானது ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட பணிகளில் இருந்துவருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான தகவல்கள் வைரலாகிவரும் நிலையில், இதில் தமிழ் சினிமாவில் இரு தூண்கள் கலந்துகொள்ள உள்ளார்களாம்.

Parasakthi: பராசக்தி பட ஆடியோ லான்ச் எப்போது? அட இந்த பிரபலங்கள் தான் கெஸ்ட்-ஆ?
பராசக்திImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 04 Dec 2025 11:18 AM IST

இயக்குநர் சுதா கொங்காராவின் (Sudha Kongara) இயக்கத்தில் மிக பிரம்மாண்ட படமாக தயாராகியிருப்பது பராசக்தி (Parasakthi). இந்த படத்தில் முதலில் நடிகர் சூர்யா (Suriya) நடிக்கவிருந்தார் பின் சில காரணங்களால் அவர் இந்த படத்திலிருந்து விலகிய நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) கதாநாயகனாக களமிறங்கினார். இந்த படம் ஆரம்பத்தில் SK25 அழைக்கப்பட்டுவந்த நிலையில், அதை தொடர்ந்து பராசக்தி என டைட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் லீட் ரோலில் நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை ஸ்ரீலீலா (Sreeleela) நடித்துள்ளார். இவருக்கு தமிழில் முதல் படம் பராசக்திதான். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar) இசையமைத்துவருகிறார். இவரின் இசையமைப்பிலிருந்து இதுவரை 2 பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருக்கிறது. மேலும் இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது.

இதன் காரணமாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என ரசிகர்கள் கேட்டுவரும் நிலையில், இது தொடர்பான தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இப்படத்தின் ஆடியோ லான்ச் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதியில் சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாம்.

இதையும் படிங்க:  பூஜையுடன் தொடங்கியது ரியோவின் ராம் in லீலா படம்… வைரலாகும் போஸ்ட்

பராசத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் கோலிவுட் பிரபலங்கள் :

இந்த பராசக்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சிவகார்த்திகேயனின் 25வது படம் என்பதால் அதனை மிகச்சிறப்பாக கொண்டாடவுள்ளனர்.  இதன் காரணமாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெறுகிறதாம். இந்த இசை வெளியீட்டு விழாவில் இரண்டு பிரபல நடிகர்கள் ஒன்றாக கலந்துகொள்கிறார்களாம்.

இதையும் படிங்க: அங்கம்மாள் படம் எப்படி இருக்கு? பிரிவியூ ஷோ பார்த்தவர்கள் கொடுத்த விமர்சனம்

அவர்கள் வேறு யாருமில்லை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் தான். இவர்கள் இருவருமே பராசக்தி படத்தின் ஆடியோ லாஞ்சில் கலந்துகொள்வதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பராசக்தி படக்குழு வெளியிட்ட 2வது பாடல் தொடர்பான பதிவு :

இந்த பராசக்தி படத்தில் முக்கிய வில்லனாக நடிகர் ரவி மோகன் நடித்துள்ளார். மேலும் இவருடன் நடிகர்கள் அதர்வா, ராணா, பேசில் ஜோசப் போன்ற பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் பிரம்மாண்ட படமாக இந்த பராசக்தி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படம் தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்திற்கு போட்டியாக இறங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வெற்றிபெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.