தொடர் மழை காரணமாக ரிலீஸ் தேதியை ஒத்திவைத்த லாக்டவுன் படக்குழு!
Lockdown Movie Release Ponstponed: தமிழ் நாட்டில் டிட்வா புயல் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளுர் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக இருந்த லாக்டவுன் படம் தேதி குறிப்பிடாமல் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுபமா பரமேசுவரன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த 2025-ம் ஆண்டில் மட்டும் நடிகை அனுபமா பரமேசுவரன் நடிப்பில் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளிலும் தொடர்ந்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இறுதியாக நடிகை அனுபமா பரமேசுவரன் நடிப்பில் வெளியான படம் பைசன் காளமாடன். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நாயகனாக நடித்து இருந்தார். இதில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேசுவரன் நடித்து இருந்தார்.
தொடர்ந்து நாயகன்களுக்கு ஜோடியாக மட்டும் இன்றி கதையின் நாயகியாக நடிகை அனுபமா பரமேசுவரன் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் முன்னணி வேடத்தில் நடித்து வரும் படங்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அடுத்ததாக நடிகை அனுபமா பரமேசுவரன் முன்னணி வேடத்தில் நடித்துள்ள படம் லாக்டவுன்.




தொடர் மழை காரணமாக ரிலீஸ் தேதியை ஒத்திவைத்த லாக்டவுன் படக்குழு:
இந்தப் படத்தை இந்தியாவில் போடப்பட்ட லாக்டவுனை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இயக்குநர் ஏஆர் ஜீவா எழுதி இயக்கி உள்ள இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரடெக்ஷன் சார்பாக தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரித்து இருந்தார். படம் முன்னதாக வருகின்ர 5-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் டெட்வா புயல் காரணமாக தொடர் மழை பெய்து வருவதால் படத்தின் வெளியீட்டை தள்ளிவைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
Also Read… ரீ ரிலீஸாகும் தளபதி விஜயின் காவலன் படம் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
லாக்டவுன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
With the ongoing rains, the release of #Lockdown has been postponed. ⛈️ Your safety comes first. We’ll meet you in theatres soon. 🎬#LockdownInCinemasSoon pic.twitter.com/vKeCPiHw7R
— Lyca Productions (@LycaProductions) December 3, 2025
Also Read… ஓடிடியில் வெளியாகும் மாஸ்க் படம்… எங்கு எப்போது பார்க்கலாம்?