ஓடிடியில் வெளியாகும் மாஸ்க் படம்… எங்கு எப்போது பார்க்கலாம்?
Kavins Mask Movie OTT Update: நடிகர் கவின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் இறுதியாக நடிகர் கவின் நடிப்பில் வெளியான மாஸ்க் படம் ஓடிடியில் எப்போது வெளியாகிறது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
வெள்ளித்திரையில் திரைப்படங்களில் நாயகனாக நடிப்பதற்கு முன்னதாகவே சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து தனக்கு என்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் கவின். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் வேட்டையன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக நடிகர் கவின் கலந்துகொண்டார். இதுவரை 9 சீசன்கள் நடைப்பெற்று வந்தாலும் கவின், சாண்டி ஆகியோர் கலந்துகொண்ட பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது வரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீசனாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கான ரசிகர் பட்டாளத்தை அதிகரித்துக்கொண்டார் நடிகர் கவின். அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் தொடர்ந்து படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார் நடிகர் கவின்.
இவரது நடிப்பில் முன்னதாக படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் கவின் நடிப்பில் வெளியான லிஃப்ட் படத்தில் இருந்து தொடர்ந்து படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. லிஃப்ட் படத்தை தொடர்ந்து வெளியான டாடா படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியான ஸ்டார், கிஸ் மற்றும் தற்போது வெளியான மாஸ்க் படம் வரை நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
ஓடிடியில் வெளியாகும் கவினின் மாஸ்க் படம்:
இந்த நிலையில் நடிகர் கவின் நாயகனாக நடித்து கடந்த 21-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியா வில்லியாக நடித்துள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ருஹானி ஷர்மா, சார்லி, அச்யுத் குமார், அர்ச்சனா சந்தோக், ஜார்ஜ் மரியன், ஆடுகளம் நரேன், சுப்பிரமணிய சிவா, கல்லூரி வினோத், மூணார் ரமேஷ், பவன், வெங்கட் செங்குட்டுவன், மகாதேவ் பையக்கல், ரெடின் கிங்ஸ்லி, நெல்சன் திலீப்குமார் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனம் பெற்றுள்ளதாக முன்னதாகவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் படம் டிசம்பர் மாதம் இறுதியில் ஓடிடியில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Also Read… நடிகர் நானிக்கு கதை சொன்ன இயக்குநர் பிரேம் குமார்? வைரலாகும் தகவல்
மாஸ்க் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Mask up, light up, and vibe up this Diwali! 🪔✨#MaskOnZee5@Kavin_m_0431 @andrea_jeremiah @Raasukutty16 @gvprakash @iRuhaniSharma @Bala_actor #Charle #ArchanaChandhoke @RDRajasekar #RamarEditor @jacki_art @cine_santhosh @RIAZtheboss#Zee5Tamil #Zee5 #HappyDiwali pic.twitter.com/cSJ4ydk5Zp
— ZEE5 Tamil (@ZEE5Tamil) October 20, 2025
Also Read… அஜித்தின் எளிமை மற்றும் பணிவைப் பார்த்து வியந்தேன் – அனுபமா



