அஜித்தின் எளிமை மற்றும் பணிவைப் பார்த்து வியந்தேன் – அனுபமா
Actor Ajith Kumar: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரை சமீபத்தில் பிரபல பத்திரிகையாளரான அனுபமா சோப்ரா பேட்டி எடுத்து இருந்தார். அது தொடர்பாக அனுபமா பேசியது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் தல என்று அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் அஜித் குமார் (Actor Ajith Kumar). இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்படி ஆண்டின் தொடக்கத்தில் விடாமுயற்சி படம் அடுத்ததாக குட் பேட் அக்லி என இரண்டு படங்கள் தொடர்ந்து அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நடிகர் அஜித் குமார் தனது கார் ரேசிங்கிலும் அதே அளவிற்கு கவனத்தை செலுத்தி வந்தார்.
அதன்படி தொடர்ந்து பல கார் ரேஸ் போட்டிகளில் பங்கேற்று தொடர்ந்து பல விருதுகளை வென்றார். இது தமிழ் நாட்டிற்கு மட்டும் இன்றி ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக் அமைந்தது. பல ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகள் மற்றும் பேட்டிகளில் பங்கேற்காத அஜித் குமார் கடந்த ஒரு ஆண்டாக தொடர்ந்து பல பேட்டிகளை கொடுத்து வருகிறார்.




அஜித்தின் எளிமை மற்றும் பணிவைப் பார்த்து வியந்தேன்:
அந்த வகையில் முன்னதாக பிரபல ஜார்னலிஸ்ட் அனுபமா சோப்ராவிற்கு நடிகர் அஜித் குமார் பேட்டி ஒன்றை அளித்தார். அதில் அஜித் குமார் எப்படி நடந்துகொண்டார் என்பது குறித்து அனுபமா சமீபத்தில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறியுள்ளதாவது, நான் அஜித் குமாரை பேட்டி எடுத்தப்போ, அவரோட யாரும் இல்லை. எனக்கு ஒரு மேக்கப் ஆள் இருந்தாரு, ஆனா அவர் மேக்கப் பண்ண மாட்டார். அவர் சூப்பர் ஸ்டார்னு எனக்கு சங்கடமா இருக்கு. அவர் மக்களுக்காக கதவுகளைத் திறந்து வச்சுக்கிட்டு இருக்காரு என்று அவர் தெரிவித்து இருந்தது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… 15 ஆண்டுகளை நிறைவு செய்த மைனா படம்… டி இமான் வெளியிட்ட பதிவு
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
Anupama: When I did interview with #Ajithkumar there was nobody with him✌️. I had a makeup person, but he don’t do makeup. I’m embarrassed because he is Superstar😂. He is holding doors open for people🛐
ArchanaKalpathi: He is very sweet & simple♥️pic.twitter.com/cGFMDeqTDB
— AmuthaBharathi (@CinemaWithAB) December 1, 2025
Also Read… விறுவிறுப்பாக நடைபெறும் லோகேஷ் கனகராஜின் டிசி படத்தின் படப்பிடிப்பு – அப்டேட் இதோ