விறுவிறுப்பாக நடைபெறும் லோகேஷ் கனகராஜின் டிசி படத்தின் படப்பிடிப்பு – அப்டேட் இதோ
DC Movie Update: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே பிரபலமான இயக்குநராக இருக்கும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகம் ஆகியுள்ள படம் டிசி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் அருண் மதேஸ்வரன். இவர் தமிழில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ராக்கி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கிய படம் சாணி காயிதம். நடிகர்கள் செல்வராகவன் மற்றும் கிருத்தி சுரேஷ் இருவரும் முன்னணி வேடத்ஹில் நடித்து இருந்தனர். இந்தப் படமும் க்ரைம் ஆக்ஷன் பாணியில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து டார்க் ஜானரில் படத்தை எடுத்து வந்த அருண் மாதேஸ்வரன் அடுத்ததாக இயக்கியது நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து ரத்தமும் சதையுமாக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்கி வந்த நிலையில் இவரது படங்கள் என்றாலே இவ்வளவு வன்முறைகள் இருக்கும் என்பதை காட்டும் விதமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து இவர் எந்த படத்தை இயக்குவார் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.




விறுவிறுப்பாக நடைபெறும் டிசி படத்தின் படப்பிடிப்பு:
இந்தப் படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக இந்தப் படத்தில் அறிமுகம் ஆகியுள்ளார். மேலும் இதில் லோகேஷ் கனகராஜிற்கு ஜோடியக நடிகை வாமிகா கபி நடித்து வருகிறார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரித்து வருகிறார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது கொடைக்கானலில் நடைப்பெற்று வரும் நிலையில் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு குமிலியில் நடைபெற உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கல் பரவி வருகின்றது.
Also Read… நாகூர் கந்தூரி திருவிழா… இசையமைப்பாளர் ரஹ்மான் பங்கேற்பு
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
🎬 #DC shooting is currently happening in Kodaikanal, and the team is gearing up for the next schedule in Kumily!
🔥 Meanwhile, #LokeshKanagaraj is expected to attend the #JanaNayagan Audio Launch.#ArunMatheswaran pic.twitter.com/ihWCI125uX
— Movie Tamil (@_MovieTamil) December 1, 2025
Also Read… சூர்யா 46 அந்த ஹிட் படம் மாதிரி இருக்கும் – ஜிவி பிரகாஷ் கொடுத்த அப்டேட்