நாகூர் கந்தூரி திருவிழா… இசையமைப்பாளர் ரஹ்மான் பங்கேற்பு
Music Director AR Rahman: இந்திய சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவருக்கு இறை நம்பிக்கை அதிகம் என்பது இவரை அறிந்த அனைவருக்கும் நன்கு தெரியும். இந்த நிலையில் நாகூரில் நடைபெறும் கந்தூரி திருவிழாவிற்கு ஏ.ஆர்.ரகுமான் சென்று கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இசைப் புயல் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவரை ரசிகர்கள் ஆஸ்கர் நாயகன் என்று அழைப்பார்கள். ஒரே நேரத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று தமிழ் சினிமாவையும் குறிப்பாக இந்திய சினிமாவை உலக அளவிற்கு பிரபலப்படுத்தியதில் பெரிய பங்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் முன்னதாக வெளியான ரோஜா என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் உருவாகும் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருகிறார். இவரது இசையில் வெளியாகும் பாடல்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இறுதியாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள தேரே இஸ்க் மெய்ன் என்ற படத்திற்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைத்து இருந்தார். இவரின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் அடுத்தடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாக உள்ள படங்கள் வரிசைக்கட்டிக் காத்திருக்கின்றது. அதன்படி மொத்தம் 14 படங்கள் ரஹ்மானின் இசையில் வெளியாக காத்திருக்கின்றது.
நாகூர் கந்தூரி திருவிழாவில் கலந்துகொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்:
இந்த நிலையில் தொடர்ந்து படங்களுக்கு பிசியாக இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் அவரது இறை நம்பிக்கையை என்றும் விட்டுக்கொடுத்ததே இல்லை. தொடர்ந்து சென்னை மவுண்ட் ரோடில் உள்ள தர்காவிற்கும் நாகூரில் உள்ள தர்காவிற்கும் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் நாகூர் தர்காவில் நடைப்பெற்ற கந்தூரி திருவிழாவிற்கு ஆட்டோவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.




Also Read… பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்த ஆதிரை… அதிர்ச்சியில் எஃப்ஜே மற்றும் வியானா
இணையத்தில் கவனம் பெறும் வீடியோ:
Also Read… மலையாள சினிமாவில் இந்த அபயந்தர குட்டவாளி படத்தை மிஸ் செய்யாதீர்கள்