இந்தியாவின் 'முத்து நகரம்' என்று அழைக்கப்படும் ஐதராபாத் மற்றும் ஈரான் தேசத்திற்கு இடையிலான உறவு இன்று நேற்றல்ல, பல நூற்றாண்டுகள் பழமையானது. தற்போதைய ஈரான், இஸ்ரேல் போர்ச் சூழலில், ஐதராபாத்தில் உள்ள ஈரானிய வம்சாவளியினர் தங்கள் பூர்வீக தேசத்திற்காகக் கவலை தெரிவித்து வரும் வேளையில், இவ்விரு பகுதிகளுக்கும் இடையே உள்ள ஆழமான பிணைப்பை இந்தப் பதிவு விளக்குகிறது.