15 ஆண்டுகளை நிறைவு செய்த மைனா படம்… டி இமான் வெளியிட்ட பதிவு
15 Years Of Mynaa Movie: தமிழ் சினிமாவில் இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் மைனா. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் படம் குறித்து இசையமைப்பாளர் டி இமான் வெளியிட்ட பதிவு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த 01-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் மைனா. ரொமாண்டிக் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் பிரபு சாலமன் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் விதார்த் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருக்கு ஜோடியாக நடிகை அமலா பால் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் சேது, பிரபு, தம்பி ராமையா, ஜி.எம்.குமார், சுசேன் ஜார்ஜ், செவ்வாலை, கார்த்திக், வெங்கையா பாலன், வணக்கம் கந்தசாமி, நாகேஷ் ராஜா, வெங்கடேஷ், தரணி வாசுதேவன் ஆகியோர் இணைந்து நடித்து இருந்தனர்.
மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பாக தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் இன்றுடன் திரையரங்குகளில் வெளியாகி 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் படம் குறித்து இசையமைப்பாளர் டி இமான் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




மைனா படம் குறித்து டி இமான் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
15 ஆண்டுகளை நிறைவு செய்த மைனா படம் திரும்பிப் பார்க்க! ஏக்கமாக உணர!
மைனா நிறைய நினைவுகளைத் தருகிறது! ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சி அனுபவம் இன்னும் நினைவில் இருக்கிறது! இந்த அற்புதமான நிகழ்வுக்கு எங்களை மீண்டும் அழைத்து வந்த கலாட்டா குழுவினருக்கு நன்றி!
நமது கேப்டன் இயக்குனர் பிரபுசாலமன் சகோதரர், தம்பி ராமையா மாமா, விதார்த் சகோதரர் மற்றும் அமலா பால் சகோதரியைப் பார்ப்பதில் மகிழ்ச்சி!
கடவுளுக்கு நன்றி! (எங்கள் காம்போவைப் பற்றி கேட்கும் அனைவருக்கும் – ஆம், நாங்கள் இப்போது தொடர்ச்சியாக இரண்டு திட்டங்களில் பணியாற்றி வருகிறோம்) என்று அந்தப் பதிவில் அவர் தெரிவித்து இருந்தார்.
Also Read… மலையாள சினிமாவில் இந்த அபயந்தர குட்டவாளி படத்தை மிஸ் செய்யாதீர்கள்
டி இமான் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#15YearsOfMyna
To look back! To feel Nostalgic!
Myna brings lot of memories!
Still remember the First Day First Show experience at AVM Rajeshwari Theatre!
Thanks to Galatta team for bringing us all back to this wonderful event!
Glad to catch our Captain Director Prabusolomon… pic.twitter.com/cuzxLRJZTh— D.IMMAN (@immancomposer) December 1, 2025
Also Read… பிக்பாஸில் இந்த வார வீட்டு தல இவர்தானா? வெளியானது வீடியோ