நடிகர் நானிக்கு கதை சொன்ன இயக்குநர் பிரேம் குமார்? வைரலாகும் தகவல்
Director Prem Kumar: தமிழ் சினிமாவில் 96 படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் இயக்குநர் பிரேம் குமார். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்கள் மட்டும் இன்றி பிரபலங்கள் பலரும் அவரது படங்களை கொண்டாடி வந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் சினிமாட்டோகிராஃபராக அறிமுகம் ஆனவர் பிரேம் குமார். தொடர்ந்து சினிமாட்டோகொராஃபராக பணியாற்றி வந்த பிரேம் குமார் பிறகு இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெளியான 96 என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் பிரேம் குமார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாகவும் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாகவும் நடித்து இருந்தார். பள்ளியில் காதலித்தவர்கள் சேராமல் போக அவர்களின் காதல் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழியவில்லை என்பதைக் காட்டி இருந்தார். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது பலருக்கு அவர்களின் பள்ளியில் நடந்த நிகழ்வுகளை அசைபோடும் அளவிற்கு மிகவும் நாஸ்டாலஜியாக இருந்தது என்று ரசிகர்கள் தொடர்ந்து மகிழ்ச்சியாக தெரிவித்து வந்தனர்.
இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இதனைத் தொடர்ந்து இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான படம் மெய்யழகன். இந்தப் படத்தில் நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்தசாமி இருவரும் இணைந்து நடித்து இருந்தனர். மிகவும் ஃபீல் குட் படமாக வெளியாகி இருந்த இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தை வெகுவாகப் பாராட்டி இருந்தனர். குறிப்பாக நடிகர் நானி தனது கடந்த 10 ஆண்டுகளில் பார்த்த படங்களில் சிறந்த படம் மெய்யழகன் என்று தெரிவித்து இருந்தார்.




நடிகர் நானியை இயக்கும் இயக்குநர் பிரேம்குமார்:
இந்த நிலையில் மெய்யழகன் படத்ஹ்டை தொடர்ந்து இயக்குநர் பிரேம் குமார் 96 படத்தின் இரண்டாம் பாகம் அல்லது, சியான் விக்ரமின் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது சினிமா வட்டாரங்களில் இயக்குநர் பிரேம் குமார் தற்போது நடிகர் நானிக்கு கதை சொன்னதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read… விறுவிறுப்பாக நடைபெறும் லோகேஷ் கனகராஜின் டிசி படத்தின் படப்பிடிப்பு – அப்டேட் இதோ
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
• After directing 96 and Meiyazhagan, director #PremKumar was earlier reported to team up with #ChiyaanVikram and #FahadhFaasil for his next film. 🎬✨
• But now, it is said that he has narrated a story to actor #Nani. 🟢🔥
• The project is expected to take shape based on… pic.twitter.com/6UyWBesOXJ— Movie Tamil (@_MovieTamil) December 2, 2025
Also Read… ஜன நாயகன் ஆடியோ லாஞ்சில் இந்த பிரபலங்கள் எல்லாம் பங்கேற்பார்களா? வைரலாகும் தகவல்