என்னுடைய படைப்புகளில் சிறந்ததாக இருக்கும் 96 பாகம் 2 – இயக்குநர் பிரேம் குமார்
96 Part 2 Update: கோலிவுட் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் 96. இந்தப் படத்தை இயக்குநர் பிரேம் குமார் இயக்கி இருந்த நிலையில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் முன்னணி வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட் சினிமாவில் ஒளிபதிவாளராக அறிமுகம் ஆனவர் பிரேம் குமார் (Director Prem kumar). இவர் கடந்த 4-ம் தேதி அக்டோபர் மாதம் 2018-ம் ஆண்டு வெளியான 96 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் பிரேம் குமார். அதன்படி ரொமாண்டிக் ட்ராமாகவ வெளியான இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாகவும் நடிகை த்ரிஷா க்ருஷ்ணன் நாயகியாகவும் நடித்து இருந்தார். 1996-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த போது ஏற்பட்ட காதல் வாழ்நாள் முழுவதும் எப்படி தொடர்கிறது என்பதே படத்தின் கதை. ஃபீல் குட் படமாக வெளியான இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஆதித்யா பாஸ்கர், கௌரி ஜி கிருஷ்ணன், தேவதர்ஷினி, நியாதி கடம்பி, பகவதி பெருமாள், ஜனகராஜ், ஆடுகளம் முருகதாஸ், வர்ஷா பொல்லம்மா, ராம்குமார், கவிதாலாய கிருஷ்ணன், ஷ்யாம் பிரசாத் என பலர் இந்தப் படத்தில் முன்னணி வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பாக தயாரிப்பாளர் எஸ். நந்தகோபால் இந்தப் படத்தை தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்து இருந்தனர். படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




96 படம் முதல் பாகத்தை விட இரண்டாம் பாக சிறப்பாக இருக்கும்:
முதல் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல இரண்டாம் பாகம் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து இயக்குநர் பிரேம் குமார் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, 96 பகுதி 2 ஸ்கிரிப்ட் முடிந்துவிட்டது, இதுவரை நான் எழுதியதில் இதுவே சிறந்த எழுத்து. 100 சதவீதம் என் நண்பர்கள் ’96 பகுதி 1 ஐ விட இது மிகவும் சிறந்தது’ என்று சொன்னார்கள். ஐசரிகணேஷ் சார் ஸ்கிரிப்டைக் கேட்டதும், பல லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியைக் கொடுத்தார். மேலும் முதல் பாகத்தில் உள்ள நடிகர்களை வைத்துதான் இந்த இரண்டாம் பாகத்தில் நடித்தால் தான் நிச்சயமாக இந்தப் படத்தை எடுப்பேன். இல்லை என்றால் இந்தப் படத்தை நான் எடுக்க மாட்டேன் என்றும் அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
Also Read… நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, மணிகண்டனுக்கு கலைமாமணி விருது அறிவிப்பு
ரசிகர்களிடையே கவனம் பெறும் இயக்குநர் பிரேம் குமார் பேசிய வீடியோ:
“#96Part2 Script has been completed & it’s my best writing so far.💯 Friends said ‘It is far better than 96’📈. When IshariGanesh sir heard the script, he given a gold chain worth several lakhs💰. I will do with same cast (or) i won’t do it❌”
– #Premkumar pic.twitter.com/4YqUKLQcJf— AmuthaBharathi (@CinemaWithAB) September 24, 2025
Also Read… மனதை திருடிவிட்டாய் படத்தின் இயக்குநர் நாராயண மூர்த்தி மாரடைப்பால் காலமானார்