அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், உலகின் மிக சக்திவாய்ந்த போர் கப்பல்களில் ஒன்றான அமெரிக்க விமான தாங்கி கப்பல் மத்திய கிழக்கு பகுதிக்குத் திருப்பி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கை உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த கப்பல் யூஎஸ்எஸ் ஜெரால்டு எனப்படும் அமெரிக்காவின் முன்னேற்றமான அணு சக்தி விமான தாங்கி கப்பல் ஆகும்.