Siruthai Siva: அஜித் குமாருடன் அடுத்த படமா? – ரகசியத்தை உடைத்த சிறுத்தை சிவா!
Siruthai Siva - Ajith Kumar Alliance: தமிழில் பிரபல இயக்குநராக இருப்பவர் சிறுத்தை சிவா. இவர் ரஜினிகாந்த் முதல் அஜித் குமார் வரை போன்ற பல்வேறு பிரபலங்களின் படங்களை இயக்கியுள்ளார். அந்த விதத்தில் சமீபத்தில் பத்திரிக்கை நேர்காணல் ஒன்றில் இவர், அஜித்துடன் புது படத்தில் இணைகிறாரா? என்பது குறித்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சிறுத்தை சிவா (Siruthai Siva) தமிழ் சினிமாவில் அஜித் குமார் (Ajith Kumar) முதல் சூர்யா (Suriya) போன்ற பல்வேறு பிரபலங்களுடன் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். ஆரம்பத்தில் தெலுங்கில் படத்தை இயங்கிவந்த இவருக்கு, தென்னிந்திய மக்களிடையே மிக பிரம்மாண்ட பெயரை வாங்கிக்கொடுத்த படம் என்ற அது சிறுத்தை (Siruthai). நடிகர் கார்த்தியின் (Karthi) நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டில் இப்படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக நுழைந்தார். இதையடுத்து தமிழில் தொடர்ந்து படங்களை இயக்கிவந்தார். மேலும் இவர் அஜித் குமாரின் கூட்டணியில் கிட்டத்தட்ட 4 படங்களை இயக்கியுள்ளார். அந்த விதத்தில் இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் கங்குவா (Kanguva). சூர்யாவின் நடிப்பில் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் கடந்த 2024ம் ஆண்டில் இப்படம் வெளியாகியிருந்தது.
ஆனால் இப்படமானது விமர்சனங்கள் ரீதியாக பெரும் தோல்வியை சந்தித்திருந்தது. இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கை நேர்காணல் ஒன்றில் பேசிய சிறுத்தை சிவா, “அஜித் குமாருடன் புது படத்தில் இணைகிறாரா?” என்பது குறித்து தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: ரவி தேஜாவிற்கு ஜோடியாக நடிக்கும் பிரியா பவானி சங்கர்… வெளியானது கேரக்டர் போஸ்டர்
அஜித்துடன் புது படத்தில் இணைவது குறித்து சிறுத்தை சிவா பேச்சு :
சமீபத்தில் பத்திரிக்கை நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டிருந்த இயக்குநர் சிறுத்தை சிவாவிடம், “அஜித் குமார் சாருடன் உங்களின் அடுத்த திரைப்படம் எப்போது?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “எல்லாம் சரியாக நடந்தவுடன், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும். இந்த படம் எப்படிப்பட்ட ஜானரை சார்ந்து இருக்கும் என்பது குறித்து, தற்போதுதைக்கு ரகசியமாக வைத்திருக்கிறேன். அவர் ஓகே சொன்னால் அறிவிக்கப்படும்” என அதில் ஆவர் தெரிவித்துள்ளார்.
சிறுத்தை சிவா சொன்னது குறித்து வைரலாகும் பதிவு :
Director #Siva – Recent Interview 🎬
Q: When is your next film with Ajith sir…?
A: When everything falls into place perfectly, the official announcement will be made 🤝✨
As for what genre the film will be, we’re keeping it a secret for now 🤫#Ajithkumar | #AK64 pic.twitter.com/Rv1yamPY1S— Movie Tamil (@_MovieTamil) February 15, 2026
அஜித் குமார் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணி :
அஜித் குமார் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணி கடந்த 2014ம் ஆண்டில் வெளியான வீரம் என்ற படத்தின் மூலம் முதல் முறையாக இணைந்திருந்தது. அண்ணன் தம்பி பாசம் , காதல் மற்றும் உறவுகள் போன்ற கதைக்களத்தில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. இதையடுத்து வேதாளம், விவேகம் மற்றும் விசுவாசம் போன்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படங்களை நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படங்ககளை தொடர்ந்து ரஜினிகாந்தை வைத்து அண்ணதே என்ற படத்தை இயக்கியிருந்தார்.
இதையும் படிங்க: இரண்டு ஆண்டுகளைக் கடந்தது மம்முட்டியின் மிரட்டலான நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த பிரமயுகம் படம்!
இப்படமானது இவருக்கு எதிர்பாராத வரவேற்பை கொடுக்கவில்லை. மேலும் இறுதியாக இவர் சூர்யாவை வைத்து, கங்குவா என்ற படத்தை இயக்கி பிரம்மாண்ட தோல்வியை சந்தித்தார். தற்போது இதை தொடர்ந்து மீண்டும் இவர் அஜித் குமார்தான் 5வது முறையாக இணையவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இப்படம் ஆதிக் ரவிச்சந்திரனின் AK64 படத்திற்கு பின் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.