AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரூ.20 லட்சம் உத்தரவாதம் இல்லாத கடன்.. அரசின் அசத்தல் முத்ரா யோஜனா கடன் திட்டம்!

Mudra Yojana Loan Scheme | அரசு பொதுமக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் முத்ரா யோஜனா திட்டம். இந்த திட்டத்தில் உத்தரவாதம் இல்லாமல் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இந்த திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரூ.20 லட்சம் உத்தரவாதம் இல்லாத கடன்.. அரசின் அசத்தல் முத்ரா யோஜனா கடன் திட்டம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 09 Oct 2026 23:28 PM IST

பொதுமக்களுகாக அரசு பல்வேறு சேமிப்பு (Saving) மற்றும் முதலீட்டு (Investment) திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சில கடன் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கான சில மானியத்துடன் கூடிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், சிறு தொழில் தொடங்க அரசு வழங்கும் திட்டம் தான் முத்ரா யோஜனா திட்டம் (Mudra Yojana Scheme). இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம். இந்த நிலையில், முத்ரா யோஜனா என்றால் என்ன, இந்த திட்டத்தில் கடன் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அரசின் அசத்தல் முத்ரா யோஜனா கடன் திட்டம்

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்பது கார்ப்பரேட் அல்லாத விவசாயம் அல்லது சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் கடன் திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இந்த திட்டம், உற்பத்தி, வர்த்தகம், சேவைத்துறைகள் மற்றும் விவசாயம் சார்ந்த உபதொழில்களில் ஈடுபடும் சிறு வணிகர்களுக்கு நிதியுதவி அளிக்கிறது.

இதையும் படிங்க : வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: வெறும் ரூ.3,000க்கு ஓராண்டு முழுவதும் கட்டணமில்லாப் பயணம்

ரூ.10 லட்சம் வரை பிணையமில்லாத கடன்

பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் மூலம் சிறு மற்றும் குறு தொழில்களை தொடங்க அல்லது மேம்படுத்த ரூ.10 லட்சம் வரை பிணையமில்லாத கடன் வழங்கப்படுகிறது. இதுவே கோழி வளர்ப்பு, பால் பண்ணை, தேனீ வளர்ப்பு போன்ற வேளாண்மை சார்ந்த செயல்பாடுகள் உட்பட உற்பத்தி, வர்த்தகம் அல்லது சேவைத் துறைகளில் ஈடுபட்டுள்ள குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தினமும் 7 கோடி முட்டை… ஆண்டுக்கு ரூ.10,000 கோடி வர்த்தகம் – இந்தியாவின் முட்டை நகரின் பின்னணி

கடன் திட்டத்தின் முக்கிய அம்சங்க என்ன என்ன?

இந்த கடன் திட்டத்தின் வட்டி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வழிகாட்டுதல்களின்படி மாறுபடும். பொதுவாக 9.50 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை இந்த கடன்களுக்கான வட்டி விகிதங்கள் இருக்கும். இந்த கடனை பெற எந்தவித அடமானமும், உத்தரவாதமும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us