AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: வெறும் ரூ.3,000க்கு ஓராண்டு முழுவதும் கட்டணமில்லாப் பயணம்

FASTag Annual Pass Plan : சுங்கச்சாவடிகளுக்க அருகில் வசிப்பவர்களுக்கான  விதிமுறைகளில் முக்கிய மாற்றங்களை உள்ளடக்கிய புதிய கொள்கை ஒன்று அமல்படுத்தப்பட்டுள்ளது. மாதந்தோறும் ஃபாஸ்டேக் பாஸ் புதுப்பிக்கும் சிரமம் ஏதுமின்றி, வெறும் ரூ.3,000 கட்டணத்தில் ஆண்டு முழுவதும் எத்தனை முறை வேண்டுமானாலும் சுங்கச்சாவடி வழியாகப் பயணிக்கலாம் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: வெறும் ரூ.3,000க்கு ஓராண்டு முழுவதும் கட்டணமில்லாப் பயணம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 08 Oct 2026 21:00 PM IST

வாகன ஓட்டிகளுக்கு மத்திய அரசு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது. சுங்கச்சாவடிகளுக்க அருகில் வசிப்பவர்களுக்கான  விதிமுறைகளில் முக்கிய மாற்றங்களை உள்ளடக்கிய புதிய கொள்கை ஒன்று அமல்படுத்தப்பட்டுள்ளது. மாதந்தோறும் ஃபாஸ்டேக் பாஸ் புதுப்பிக்கும் சிரமம் ஏதுமின்றி, வெறும் ரூ.3,000 கட்டணத்தில் ஆண்டு முழுவதும் எத்தனை முறை வேண்டுமானாலும் சுங்கச்சாவடி வழியாகப் பயணிக்கலாம் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வருடாந்திர பாஸைப் பெறுவதற்கு யார் தகுதியானவர்கள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வெறும் ரூ.3,000க்கு ஓராண்டு முழுவதும் கட்டணமில்லாப் பயணம்

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் டோல் கேட்டிற்கு அருகே வசிக்கும் வாகன ஓட்டிகளுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளித்துள்ளது. சுங்கச்சாவடிகளுக்கு அருகில் வசிப்பவர்களுக்கான வருடாந்திர ஃபாஸ்டேக்பாஸ் குறித்த முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுங்கச்சாவடியைச் சுற்றியுள்ள 20 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வசிக்கும் வணிகம் சாராத வாகனங்களின் உரிமையாளர்களுக்கு, மிகக் குறைந்த கட்டணத்தில் வருடாந்திர உள்ளூர் ஃபாஸ்டேக் பாஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : ATM-ல் பணம் கைக்கு வராமலே கணக்கில் டெபிட் ஆகிவிட்டதா?.. RBI-ன் இந்த விதிகளை தெரிந்துக்கொள்ளுங்கள்!

முந்தைய விதிகளின்படி, ரூ.3,075 மதிப்பிலான வருடாந்திர பாஸ் வைத்திருந்தாலும், ஆண்டுக்கு அதிகபட்சம் 200 பயணங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. அல்லது ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்தி மாதாந்திர பாஸைப் புதுப்பிக்க வேண்டியிருந்தது. தற்போதைய விதிமுறைகள் இந்தப் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வை வழங்குகின்றன. அதன் படி ரூ.3,000 என்ற நிலையான கட்டணத்தில் கிடைக்கும் இந்த புதிய வருடாந்திர பாஸ் மூலம், குறிப்பிட்ட சுங்கச்சாவடி வழியாக ஆண்டு முழுவதும் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம். ஒவ்வொரு மாதமும் பாஸ் காலாவதியாவது குறித்து கவலைப்படத் தேவையில்லை. ஆண்டுக்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்தாலே போதுமானது.

இத்திட்டத்திற்கு யார் தகுதியானவர்கள்?

இந்த வசதி அந்தந்த தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியைச் சுற்றியுள்ள 20 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். மேலும் இந்தக் சலுகை வெள்ளை நிற நம்பர் பிளேட் கொண்ட கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் போன்ற தனிப்பட்ட பயன்பாட்டு வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். டாக்ஸிகள் அல்லது பிற வணிக ரீதியான வாகனங்களுக்கு இது பொருந்தாது.

மேலும் ஃபாஸ்டேக்கை உள்ளூர் பாஸாக மாற்ற, வாகனத்தின் பதிவுச் சான்றிதழ்மற்றும் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற உள்ளூர் முகவரிச் சான்றை சமர்ப்பிக்க வேண்டும். இந்த முழு செயல்முறையும் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகிறது. வேலை, தொழில், பள்ளிக்குச் செல்வது அல்லது விவசாயப் பணிகள் போன்ற காரணங்களுக்காக அடிக்கடி சுங்கச்சாவடியைக் கடக்கும் நபர்கள், சுங்கக் கட்டணத்தில் ஆயிரக்கணக்கான ரூபாய்களைச் சேமிக்கலாம்.

இதையும் படிக்க : SIP முதலீட்டாளர்களே இந்த 8-4-3 விதியை கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்.. முழு விவரம் இதோ!

உள்ளூர் பாஸ், ஃபாஸ்டேக்குடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதால், சுங்கச்சாவடி தடையின்றி கடக்கலாம், இதனால் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. இது, உள்ளூர் மக்களுக்கு அடையாளச் சரிபார்ப்புகளின் போது அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களுக்கும் வாக்குவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது. எந்தவொரு நேரடித் தலையீடும் இல்லாமல், ஃபாஸ்டேக் இணையதளம் அல்லது செயலி மூலமாக நேரடியாக இந்த பாஸைப் பெறலாம். உள்ளூர் மக்களின் நிதிச் சுமையைக் கணிசமாகக் குறைப்பதையும், தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் செயல்முறையை வேகமாகவும் வெளிப்படையாகவும் மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு இந்த புதிய முறையைச் செயல்படுத்தியுள்ளது.

Follow Us