SIP முதலீட்டாளர்களே இந்த 8-4-3 விதியை கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்.. முழு விவரம் இதோ!
Reach 1 Crore Rupees Easily with SIP | தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்கள் முதலீடு செய்யும் திட்டமாக எஸ்ஐபி உள்ளது. இந்த நிலையில், எஸ்ஐபியில் எளிதாக ரூ.1 கோடி இலக்கை எட்ட 8-4-3 என்ற விதியை பயன்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.
சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்தால் தான் பொருளாதார பாதுகாப்பை பெற முடியும் என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பலரும் ஏதேனும் ஒரு சேமிப்பு அல்லது முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். அவ்வாறு பொதுமக்கள் மத்தியில் மிகவும் பரவலாக காணப்படும் முதலீட்டு முறைதான் எஸ்ஐபி (SIP – Systematic Investment Plan). நீண்ட கால அடிப்படையில் எஸ்ஐபியில் முதலீடு செய்து வரும் பட்சத்தில் நிதி இலக்கை சுலபமாக அடைந்துவிட முடியும் என்பதால் ஏராளமான இந்தியர்கள் இந்த எஸ்ஐபி முதலீட்டில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில், ரூ.1 கோடி என்ற இலக்கை எட்ட உதவி செய்யும் 8-4-3 என்ற ஃபார்முலா குறித்தும், அது எப்படி செயல்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
எஸ்ஐபி முதலீட்டுக்கான 8-4-3 விதி என்றால் என்ன?
அதாவது எஸ்ஐபி முதலீட்டில் 8-4-3 என்ற காம்பவுண்டிங் முறையை தான் நாம் பயன்படுத்தப்போகிறோம். அதாவது, 15 ஆண்டு கால முதலீட்டை 8 ஆண்டுகள், 4 ஆண்டுகள் மற்றும் 3 ஆண்டுகள் என மூன்று பிரிவுகளாக பிரித்து முதலீடு செய்வது தான் இந்த விதி.
முதல் 8 ஆண்டுகள்
முதலீட்டின் முதல் 8 ஆண்டுகள் நாம் வழக்கம் போல நமது முதலீட்டை செய்ய தொடங்குவோம். ஆரம்ப காலத்தில் நமது முதலீட்டு தொகை குறைவாக இருப்பதன் காரணமாக, நமது முதலீட்டின் வளர்ச்சியும் குறைவாகவே இருக்கும். இந்த ஆரம்ப காலக்கட்டத்தில் முதலீடு சற்று மந்தமான வளர்ச்சியை பெறுவது போல இருக்கும். இந்த நிலையில் தான் பலரும் அவசரப்பட்டு முதலீட்டை நிறுத்திவிடுவர். ஆனால், இதுதான் ஒரு கோடி என்ற இலக்கை அடையக்கூடிய வலுவான அடித்தளமாகும்.




இதையும் படிங்க : ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு: 5.50% ஆக அதிகரித்தது ரிசர்வ் வங்கி
9 முதல் 12 ஆண்டுகள்
முதல் 8 ஆண்டுகளை போல் இல்லாமல் அடுத்த 9 முதல் 12 ஆண்டுகள் முதலீட்டின் வளர்ச்சி சற்று வேகம் எடுக்கும். அதற்கு முதல் எட்டு ஆண்டுகள் நாம் தொடர்ந்து முதலீடு செய்ததுதான் முக்கிய காரணம் ஆகும். இந்த காலக்கட்டத்தில் தான் நமது ஆரம்பக்கால முதலீடு மற்றும் அதற்கான லாபம் ஆகியவை சேர்த்து மிக விரைவான வளர்ச்சியை காண முடியும்.
இதையும் படிங்க : EPFO : எம்டிஆர் கட்டணத்தை கண்டு அஞ்சும் பொதுமக்கள்.. உண்மையில் சிக்கல் யாருக்கு?.. தெரிந்துக்கொள்ளுங்கள்!
13 முதல் 15 ஆண்டுகள்
இந்த 13 முதல் 15 ஆண்டுகள் தான் முதலீட்டின் இறுதி காலம் என அழைக்கப்படுகிறது. காரணம், இந்த காலக்கட்டத்தில் முதலீடு பிரம்மாண்ட வளர்ச்சி அடைய தொடங்கும். நாம் முதலீடு செய்த தொகைக்கான 50 சதவீத லாபம் இந்த காலக்கட்டத்தில் தான் கிடைக்கும்.