AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கிரெடிட் கார்டு Vs EMI.. தீபாவளி ஷாப்பிங்குக்கு எது சிறந்தது.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Which Mode Of Payment Is Best For Diwali | இந்தியாவில் இன்னும் ஒருசில நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்கள் பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், தீபாவளி ஷாப்பிங் செய்ய கிரெடிட் கார்டு அல்லது மாத தவணை இரண்டி எது சிறந்தது என தெரிந்துக்கொள்ளுங்கள்.

கிரெடிட் கார்டு Vs EMI.. தீபாவளி ஷாப்பிங்குக்கு எது சிறந்தது.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 06 Oct 2026 21:20 PM IST

இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் மிகவும் உற்சாகமாக கொண்டாடக்கூடிய முக்கிய பண்டிகையாக தீபாவளி உள்ளது. அதிலும் தமிழக மக்கள் குறித்து சொல்லவே தேவையில்லை. தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே புத்தாடை எடுப்பது, ஆபரணங்கள் வாங்குவது, வாகனம் வாங்குவது என மிகவும் பிசியாக இருப்பர். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், கடன் வாங்கியாவது அவர்கள் தீபாவளி ஷாப்பிங் செய்வர். இந்த நிலையில், தீபாவளி ஷாப்பிங் செய்ய கிரெடிட் கார்டு (Credit Card) அல்லது மாத தவணை (EMI – Every Month Installment), இரண்டில் எது சிறந்தது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கிரெட்டி கார்டு

பொதுவாக பண்டிகை கால ஷாப்பிங்களில் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் தான் அதிகம் நடக்கும். காரணம், பண்டிகை காலத்தில் அதிக செலவு ஆகும் என்பதால் கூடுதல் நிதி தேவைக்காக பலரும் கிரெடிட் கார்டு பயன்படுத்துவர். அதுமட்டுமன்றி, பண்டிகை காலங்களின்போது அதிக ரிவார்டு பாயிண்ட்களும் வழங்கப்படுவதன் காரணமாக பலரும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனையை மேற்கொள்கின்றனர்.

இதையும் படிங்க : சம்பளத்தில் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

பண்டிகைன் காலங்களின் போது வங்கிகள் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களுடன் இணைந்து பல அசத்தலான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கும். அதனை பயன்படுத்தும் விதமாக பலரும் கிரெடிட் கார்டை பயன்படுத்துவர். அதாவது 10 சதவீதம் வரை தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது. இதில் என்ன ஒரு சிக்கல் என்றால் உரிய நேரத்தில் பேமெண்ட் செய்யவில்லை என்றால் அதிக வட்டி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

No Cost மாத தவணை

வானகங்கள், ஸ்மார்ட்போன்கள், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவை No Cost மாத தவணை முறையில் வழங்கப்படுகிறது. இந்த முறையில் பொருட்களை வாங்கினால் கூடுதலாக எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டிய தேவை இருக்காது என பலரும் நினைப்பர். ஆனால், அது அப்படி அல்லது. இந்த வகையான பரிவர்த்தனைகளுக்கு மறைமுக கட்டணம் விதிக்கப்படும்.

இதையும் படிங்க : நிலையான வைப்பு நிதி திட்டம்.. முதலீடு செய்வதற்கு முப்பு இவற்றை தெரிந்துக்கொள்ளுங்கள்!

வங்கிகள் செயலாக்க கட்டணம், ஜிஎஸ்டி ஆகியவற்றை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூல் செய்யும். எனவே, இதன் மூலம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.

Follow Us