AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தினமும் 7 கோடி முட்டை… ஆண்டுக்கு ரூ.10,000 கோடி வர்த்தகம் – இந்தியாவின் முட்டை நகரின் பின்னணி

World Egg Day : உலகின் முட்டை தினம் அக்டோபர் 9, 2026 அன்று கொண்டாடப்படுகிறது.  நாட்டின் பெரும்பாலான முட்டை தேவையை நாமக்கல் பூர்த்தி செய்கிறது. இங்கு தினமும் 7 கோடி அளவுக்கு முட்டை தயாராவதாகவும், ஆண்டுக்கு ரூ.10,000 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமும் 7 கோடி முட்டை… ஆண்டுக்கு ரூ.10,000 கோடி வர்த்தகம் – இந்தியாவின் முட்டை நகரின் பின்னணி
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 08 Oct 2026 19:08 PM IST

நாமக்கல், அக்டோபர் 8 : உலகின் முட்டை தினம் அக்டோபர் 9, 2026 அன்று கொண்டாடப்படுகிறது.  நாட்டின் பல வீடுகளில் முட்டை தவிர்க்க முடியாத உணவு. எளிய மக்களுக்கு குறைந்த செலவில் புரத சத்தை வழங்கும் உணவாக முட்டை பார்க்கப்படுகிறது. இப்படி நாட்டின் முட்டைகளின் தேவையை பூர்த்தி செய்ய இரவு முழுவதும் ஓய்வின்றி இயங்கும் ஒரு நகரம் இருக்கிறது. அதுதான் நாமக்கல். ‘இந்தியாவின் முட்டை நகரம்’ என்று அழைக்கப்படும் நாமக்கல்லின் பொருளாதாரம் முழுவதும் கோழிப்பண்ணைகளையும் முட்டை வர்த்தகத்தையும் சுற்றியே இயங்குகிறது. இங்கு தயாராகும் முட்டைகள் கெட்டுப்போவதற்கு முன்பே தமிழகத்தின் பள்ளி சத்துணவுத் திட்டம் தொடங்கி வளைகுடா நாடுகளின் சூப்பர் மார்க்கெட்டுகள் வரை சென்றடைகின்றன.

இந்தியாவின் முட்டை நகரம்

உலகமே உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் , நாமக்கல்லில் பரபரப்பாக வேலை நடக்கிறது. மாலை நேரம் தொடங்கியதும், மாவட்டத்தில் உள்ள 1,100க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளின் முன்பு லாரிகள் வரிசை கட்டி நிற்கத் தொடங்கும். லாரிகளில் முட்டைகளை ஏற்றும் பணி இரவு முழுவதும் நடைபெறும். பண்ணைகளில் நாள்தோறும் சுமார் 6 முதல் 7 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இதனால், நாட்டின் மிகப்பெரிய முட்டை உற்பத்தி மையமாக நாமக்கல் திகழ்கிறது. கோழி வளர்ப்பு முதல் முட்டைகளைப் பாதுகாப்பது வரை, பெரும்பாலான பண்ணைகள் நவீன முறைகளைப் பின்பற்றுகின்றன.

இதையும் படிக்க : வருண பகவானை வளைக்க பிளான்.. இரு தவளைகளுக்கு கலகல திருமணம்.. கோவையில் கிராம மக்கள் வினோதம்!

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை வர்த்தகம் மூலம் தினமும் சுமார் ரூ.30 முதல் ரூ.35 கோடி வரை விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இது உள்ளூர் வர்த்தகத்தின் முதுகெலும்பாக உள்ளது. முட்டை உற்பத்தி மட்டுமல்லாமல், பேக்கேஜிங், கோழித் தீவனம், போக்குவரத்து என அதனை சார்ந்த தொழில்களையும் சேர்த்து ஆண்டு ரூ.10,000 கோடி அளவுக்கு வியாபாரம் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முட்டை எளிதில் உடையக்கூடிய, விரைவில் கெட்டுப்போகக்கூடிய பொருள் என்பதால் அதனை பாதுகாப்பாகக் கொண்டு செல்ல. பிரத்யேகமாக குளிரூட்டப்பட்ட கன்டெய்னர்கள் மற்றும் லாரிகள் கொண்ட போக்குவரத்து அமைப்பை உருவாக்கியுள்ளனர். இரவில் நாமக்கல்லில் இருந்து புறப்படும் லாரிகள், மறுநாள் காலைக்குள் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா மாநிலங்களின் மொத்த சந்தைகளைச் சென்றடைகின்றன. நாடு முழுவதும் முட்டைக்காக நாமக்கல்லின் விநியோகத்தைச் சார்ந்துள்ளன.

இதையும் படிக்க : “40 நாட்கள் உழைப்பு வீண்?”.. விபிஜி ராம்ஜி திட்டத்தில் குறைந்த ஊதியம் வழங்கப்பட்டதாக பெண்கள் போராட்டம்.. அதிகாரிகள் மீது புகார்!

தமிழக அரசின் பள்ளி சத்துணவுத் திட்டம் உள்ளிட்ட ஊட்டச்சத்துத் திட்டங்களுக்குத் தேவையான முட்டைகளும் நாமக்கல் பண்ணைகளில் இருந்தே வழங்கப்படுகின்றன. இதன் மூலம், லட்சக்கணக்கான மாணவர்களின் ஊட்டச்சத்துத் தேவையிலும் இந்தத் தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

நாமக்கல்லில் இருந்து சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களுக்கு முட்டைகள் எடுத்து செல்லப்படுகின்றன. அங்கிருந்து தினமும் சுமார் 1 கோடி முட்டைகள் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், கத்தார், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் அமெரிக்கச் சந்தையிலும் நாமக்கல் முட்டைகள் நுழைந்துள்ளன. இது சர்வதேசத் தரத்தை நாமக்கல் பண்ணைகள் எட்டியுள்ளதைக் காட்டுகிறது.

Follow Us