AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு.. TNEB மின்னகம் சேவை பாதிப்பு.. வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவிக்கலாம்..

TNEB Minnagam Helpline: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 'மின்னகம்' நுகர்வோர் சேவை மையத் தொலைபேசி சேவை தொழில்நுட்பக் காரணங்களால் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்வெட்டு மற்றும் மின்வாரியப் புகார்களைத் தெரிவிக்க மாற்று வழியாக வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் சமூக வலைத்தளப் பக்கங்களைப் பயன்படுத்துமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. முழு விவரங்கள் இதோ.

பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு.. TNEB மின்னகம் சேவை பாதிப்பு.. வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவிக்கலாம்..
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 08 Oct 2026 13:59 PM IST

அக்டோபர், 08: தமிழ்நாடு முழுவதும் மின்நுகர்வோரின் மின்வெட்டு, மின்னழுத்தக் குறைபாடு, மின் கட்டணம் மற்றும் புதிய மின் இணைப்பு தொடர்பான அனைத்துப் புகார்களையும் ஒரே இடத்தில் பெற்று உடனுக்குடன் தீர்வு காணும் நோக்கில் தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) ‘மின்னகம்’ நுகர்வோர் சேவை மையத்தை இயக்கி வருகிறது. பொதுமக்கள் 24 மணி நேரமும் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு தங்கள் புகார்களைத் பதிவு செய்ய ஏதுவாக இந்த மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்னகம் நுகர்வோர் மையத்தின் தொலைபேசி சேவை தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்க: “பொய்.. பொய்.. முற்றிலும் பொய்!”.. ஜிஎஸ்டி வசூல் குறித்த திமுக குற்றச்சாட்டு.. தவெக கொடுத்த சாட்டையடி பதிலடி!!

தொலைபேசி சேவை பாதிப்பு:

மின்னகம் மையத்தின் தொலைபேசி அழைப்பு சேவை தற்காலிகமாகச் செயல்படாத நிலையில், மின் நுகர்வோர்கள் சிரமமின்றித் தங்களது புகார்களைப் பதிவு செய்யத் தமிழ்நாடு மின்சார வாரியம் மாற்று ஏற்பாட்டை அறிவித்துள்ளது. பொதுமக்கள் தொலைபேசி அழைப்புகள் மூலம் புகார்களைத் தெரிவிக்க முடியாது என்றாலும், வழக்கமான மின்னகம் உதவி எண்ணான 94987 94987 என்ற அதே எண்ணிற்கு வாட்ஸ்அப் செயலி வாயிலாகத் தங்களது மின்சாரப் புகார்களைப் மெசேஜாக அனுப்பிப் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் அளிக்கும் நடைமுறைகள்:

பொதுமக்கள் தங்கள் கைபேசியில் 94987 94987 என்ற எண்ணைச் சேமித்து, வாட்ஸ்அப் செயலியில் “HI” அல்லது புகாரின் விவரங்களைச் செய்தியாக அனுப்பலாம். தானியங்கி முறையில் கேட்கப்படும் மின் நுகர்வோர் எண், பகுதி மற்றும் புகாரின் தன்மையைக் குறிப்பிட்டு அனுப்பினால், அது உடனடியாகச் சம்பந்தப்பட்ட பிரிவுப் பொறியாளருக்கு அனுப்பப்பட்டுத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இது தவிர, TANGEDCO-வின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலமாகவும் மின் நுகர்வோர்கள் தங்களின் மின்வெட்டுச் சிக்கல்களைப் பதிவிட முடியும்.

இதையும் படிக்க: “ஜனநாயகக் குரலை நசுக்கும் செயல்!”.. ராகுல் காந்தி கைதை எதிர்த்து தவெக கடும் கண்டனம்!!

பொதுமக்கள் செய்ய வேண்டியவை:

மின்வெட்டு அல்லது மின்சாரம் தொடர்பான அவசரப் புகார்கள் இருப்பின், நுகர்வோர்கள் 94987 94987 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் தங்களது மின் நுகர்வோர் எண், முகவரி மற்றும் புகாரின் விவரங்களை அனுப்பி வைக்கலாம். தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள மின்னகம் தொலைபேசி சேவையை மீண்டும் விரைவாகச் சீரமைக்கும் பணிகளில் மின்வாரியப் பொறியாளர்களும் தொழில்நுட்பக் குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததும் வழக்கம் போல் தொலைபேசி அழைப்புகள் வாயிலாகப் புகார்களைப் பதிவு செய்யும் சேவை மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us