AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

‘ ஜெயிலர்2வில் தமன்னா வேணும்னு கேட்டேன்…’ – நெல்சனிடம் கலகலப்பாக பேசிய ரஜினிகாந்த்

Rajinikanth Clarifies Audio Launch : ஜெயிலர் 2 படத்துக்கு இசை வெளியீட்டு விழா நடைபெறாதது சர்ச்சையானது. இந்த நிலையில் ரஜினிகாந்த் உட்பட படக்குழுவினர் பங்கேற்ற நேர்காணல் சன்டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. இதில் தன் மீதான பல்வேறு விமர்சனங்களுக்கு ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார்.

‘ ஜெயிலர்2வில் தமன்னா வேணும்னு கேட்டேன்…’ –  நெல்சனிடம் கலகலப்பாக பேசிய ரஜினிகாந்த்
இயக்குநர் நெல்சனுடன் ரஜினிகாந்த்
Karthikeyan S
Karthikeyan S | Published: 09 Oct 2026 22:04 PM IST

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வருகிற அக்டோபர் 15, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஜெயிலர் முதல் பாகம் பெரும் வெற்றி பெற்ற நிலையில் ஜெயிலர் 2 படத்துக்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் இந்தப் படத்துக்கு இசை வெளியீட்டு விழா நடைபெறாதது சர்ச்சையானது. இந்த நிலையில் ரஜினிகாந்த் உட்பட படக்குழுவினர் பங்கேற்ற நேர்காணல் சன்டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. இதில் தன் மீதான பல்வேறு விமர்சனங்களுக்கு ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார்.

நெல்சனிடம் கலகலப்பாக பேசிய ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்தை இயக்குநர் நெல்ன் நேர்காணல் செய்தார். அப்போது பேசிய ரஜினிகாந்த், வழக்கமாகப் பெரிய உள் விளையாட்டு அரங்கங்களில் இசை வெளியீட்டு விழாக்களை நடத்துவோம். ஆனால், இதுவே வழக்கமான ஒன்றாக மாறிவிட்டதாகக் கருதிய தயாரிப்பு நிறுவனம், விழாவை வித்தியாசமான முறையில் நடத்தலாம் என்று யோசனை தெரிவித்தது.

இதையும் படிக்க : என் அன்பிற்கினிய.. உணர்வுகளால் நிரம்பிவழிந்த பிக் பாஸ் ஹவுஸ் – வைரலாகும் புரோமோ!

மேலும், உள் விளையாட்டு அரங்கங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் நீண்ட நேரம் நீடிப்பதால், ரசிகர்களும் பார்வையாளர்களும் சோர்வடைந்து விடுகின்றனர். இதனால், படக்குழுவினரைத் தனித்தனியாக நேர்காணல் செய்து நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்தனர். இருப்பினும், ரசிகர்களை நேரில் சந்திக்க முடியாமல் போனது எனக்கு வருத்தமாக இருக்கிறது. எதிர்காலத்தில் இந்தக் குறையை நிச்சயம் சரிசெய்வேன். என்று தெரிவித்தார்.

அப்போது இயக்குனர் நெல்சன், சார், உங்களிடம் எப்படி இவ்வளவு நாளாகியும் இந்த தன்னடக்கம் அப்படியே இருக்கிறது? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், நான் என்னை இன்னும் ஒரு பஸ் கண்டக்டராகத்தான் பார்க்கிறேன். எனக்கு ஆழமா, நான் ஒரு பஸ் கண்டக்டர்ங்கிற அடையாளம் மனசுக்குள்ள பதிஞ்சிருக்கு. நான் இன்னும் பஸ் கண்டக்டர் வேலையை மிஸ் பண்றேன் என்றார்.

ஜெயிலர் 2′ படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, சூரஜ் எல்லாருமே சூப்பரா பண்ணிருக்காங்க. படத்துல ஒரே ஒரு மிஸ்ஸிங் தமன்னா தான். தமன்னாவை ஒரு சாங்ல வச்சிக்கலாம் சார்னு நெல்சன் கிட்ட சொன்னேன், அவரு, சார் உங்களுக்கு பிடிக்கும்னு சொல்லி வச்சிக்க முடியாது சார்னு சொல்லிட்டார். எனக்கு பிடிக்கும்னு இல்ல, ஜனங்களுக்கு பிடிக்கும் அதுனால தான் கேட்டேன்னு சொன்னேன் என்றார்.

இதையும் படிக்க : Nelson Dilipkumar: நெகட்டிவ் கட் பண்ணி அனுபிறீங்க.. அது என்ன ஹிமாலயன் ரகசியமா? – ரஜினியிடம் கேள்வி கேட்ட நெல்சன்!

நான் நடிகர் என்பதை விரும்புகிறேன். ஆனால் அதைவிட பேருந்து நடத்துநர் வேலையை விரும்புகிறேன். அந்த ஐந்தாண்டு பணி அனுபவத்தை இப்போதும் மிஸ் செய்கிறேன். நான் ஒரு நடிகர், ஸ்டார் என்பதெல்லாம் இருந்தாலும், முதலில் நான் ஒரு நடத்துநர் என்பது எனக்குள் ஆழமாக ஊறிவிட்டது. எனவே ரஜினிகாந்த், சூப்பர்ஸ்டார் என்பதை எல்லாம் என்னோடு பொருத்திக் கொள்ளவே முடியவில்லை. இப்போதும் என்னை ஒரு பேருந்து நடத்துநராகவே நினைத்துக் கொள்கிறேன். ஒரு பேருந்து நடத்துநர் உங்களை போன்ற பெரிய மனிதர்களிடம் தன்மையாக தானே நடந்து கொள்வார் என்றார்.

Follow Us