அரசன் பட இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் இணைந்த சிலம்பரசன் – வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்!
Arasan Movie Shooting: கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர்தான் சிலம்பரசன். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் திரைப்படம்தான் அரசன். இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட ஒரு வருடமாக நடைபெற்றுவரும் நிலையில், இதன் ஷூட்டிங் குறித்த புகைப்படத்தை சிலம்பரசன் பகிர்ந்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபலமிக்க இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் வெற்றிமாறன் (Vetrimaaran). இவர் இறுதியாக விடுதலை பார்ட் 2 (Viduthalai part 2) படத்தை இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பின் இவர் இயக்கிவரும் அதிரடி ஆக்ஷன் படம்தான் அரசன் (Arasan). இப்படமானது 2024ம் ஆண்டில் இறுதியில் ஷூட்டிங் தொடங்கியிருந்த நிலையில், சென்னை மற்றும் கோவில்பட்டி என பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த படத்தில் சிலம்பரசன் (Silambarasan) முன்னணி நாயகனாக நடிக்க, அவருடன் பிரியங்கா மோகன் (Priyanka Mohan) மற்றும் யோகலட்சுமி (Yogalakshmi) போன்ற நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த அரசன் படமானது தனுஷின் (Dhanush) வட சென்னை (Vada Chennai) படத்தின் பின்னணி மற்றும் டைம் லைனில் நடக்கும் கதையை மையமாக கொண்டு இயக்கப்படுகிறது. இது வெற்றிமாறன் இயக்க, வி கிரியேஷன் நிறுவனத்தின் கீழ் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்.
இந்த படமானது வரும் 2027ம் ஆண்டில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த 2026ம் ஆண்டின் தீபாவளிக்கு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் நடிகர் சிலம்பரசன் இணைந்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிலம்பரசன் பதிவை வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: காதல் ப்ரேக்-அப்பிற்கு பிறகு அதுதான் எனக்கு மருந்தாக அமைந்தது – நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!
அரசன் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் சிலம்பரசன் இருக்கும் புகைப்படம் குறித்து வைரலாகும் பதிவு:
#SilambarasanTR’s Latest Clicks from the sets of #Arasan..🔥 https://t.co/e09RsSnJk1
— Laxmi Kanth (@iammoviebuff007) October 8, 2026
அரசன் படத்திலிருந்து 026ம் ஆண்டு தீபாவளிக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்:
இந்த அரசன் படமானது வட சென்னை படத்தின் டைம் லைனில் நடக்கும் மற்றொரு கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முன்னணி நாயகனாக சிலம்பரசன் நடித்துவரும் நிலையில், அவருக்கு ஜோடியக இரு நடிகைகள் நடிக்கிறார்கள்., மேலும் இதில் சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா மற்றும் கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களும் இணைந்து நடித்துவருகின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள நிலையில், மிகவும் பிரம்மாண்டமாக படமானது உருவாகிவருகிறது.
இதையும் படிங்க: ஒர்ஸ்ட் ஃபர்பாமர் ஆப் தி வீக்.. டிடிஃஎப் வாசன் மற்றும் ஷமா இடையே பலத்த மோதல் – தீயாய் பரவும் புரோமோ!
2026ம் ஆண்டு தீபாவளியை வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், ஷூட்டிங் இன்னும் நிறைவடையாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தனது ரசிகர்கள் ஏமாற்றமடைய கூடாது என சிலம்பரசன் சர்ப்ரைஸான விஷயம் ஒன்றை செய்கிறார். 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு, அரசன் திரைப்படத்திலிருந்து தி வேர்ல்ட் ஆப் அரசன் என்ற வீடியோவை படக்குழு வெளியிடுகிறதாம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.