OTT Movie: மண்டாடி முதல் கலீஃபா வரை.. இன்று ஓடிடியில் வெளியாகியுள்ள திரைப்படங்கள் லிஸ்ட் இதோ!
New Movies OTT Release: தென்னிந்திய சினிமாவில் வாரம்தோறும் பல படங்கள் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் இப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 20 முதல் ஒரு மாதத்திற்கு ஓடிடியில் வெளியாகிவிடும். அந்த விதத்தில் இன்று (09/10/2026) ஓடிடியில் வெளியாகியுள்ள தென்னிந்திய படங்கள் லிஸ்ட் குறித்து விவரமாக பார்க்கலாம்.
மண்டாடி திரைப்படம்: தமிழ் சினிமாவில் காமடி நடிகராக நடித்து, தற்போது முன்னணி நாயகனாக சினிமாவில் நடித்துவருபவர் சூரி (Soori). இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் மண்டாடி (Mandaadi). இந்த படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி (Mathimaran Pugazhendhi) இயக்கியுள்ள நிலையில், கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இதில் சூரி, மஹிமா நம்பியார் மற்றும் சுஹாஸ் போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது படக்குப் போட்டி மற்றும் அதிரடியான ஆக்ஷன் கதையில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது. இந்த படமானது திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படமானது (08/10/2026) நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: நெகட்டிவ் கட் பண்ணி அனுபிறீங்க.. அது என்ன ஹிமாலயன் ரகசியமா? – ரஜினியிடம் கேள்வி கேட்ட நெல்சன்!




மண்டாடி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து வைரலாகும் எக்ஸ் பதிவு:
Paaka dhaana poreenga, indha Kaali oda aattatha 😎🔥 https://t.co/vxeR8z5A3F
— Netflix India South (@Netflix_INSouth) October 5, 2026
கலீஃபா திரைப்படம் (Khalifa: The Ruler):
மலையாள சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் பிரித்விராஜ் சுகுமாரன். இவரின் நடிப்பில் மலையாளத்தில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம்தான் கலீஃபா. இந்த படத்தை இயக்குனர் வயஸிக் இயக்கியிருந்த நிலையில், கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதியில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் பிரித்விராஜ் சுகுமாரன், நெளி நிதின் முகேஷ், மாளவிகா ஷர்மா உள்ளிட்ட பல்வேறு நடிகர்களும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது இவருக்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில், இன்று (09/10/2026) அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
எபிக் திரைப்படம் (Epic Movie):
தெலுங்கு சினிமாவில் பிரபலமான இளம் நடிகர்களில் ஒருவர் ஆனந்த் தேவரகொண்டா. இவரின் நடிப்பிலும் நடிகை வைஷ்ணவி நடிப்பில் வெளியன் காதல் மற்றும் ரொமாண்டிக் படம்தான் எபிக். தெலுங்கில் வெளியான ரோமெண்டிக் படமான இது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியது. இந்த படமானது திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இன்று (09/10/2026) நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: இனிமேல் அந்த மாதிரியான படங்களில் மட்டுமே நடிப்பேன் – நடிகர் சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!
பாரிஸ் கஃபே திரைப்படம் (Paris Cafe):
இயக்குநர் சார்ஜ் சீலன் இயக்கத்தில், தமிழில் கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதியில் வெளியான படம்தான் பாரிஸ் கஃபே. இதில் குரு சோமசுந்தரம், அனுமோல் கே மோனோஹரன், விஜய் விஷ்வா, அர்ச்சனா ஒலி மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது அமேசான் ப்ரைம் ஓடிடியில் இன்று (09/10/2026) வெளியாகியுள்ளது.