Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

SK26 Movie: சிவகார்த்திகேயனின் SK26 பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது? – வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்!

Sivakarthikeyan SK 26 Movie First Look Release Update: தமிழில் பிரபல நாயகனாக வளர்ந்துவருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது ஆக்ஷன் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் நிலையில், மீண்டும் காமெடி மற்றும் கிராமப்புற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கும் நிலையில், ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

SK26 Movie: சிவகார்த்திகேயனின் SK26 பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது? – வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்!
சிவகார்த்திகேயனின் SK26 Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 15 Feb 2026 18:34 PM IST

தமிழில் அரசியல்வாதி, கதாநாயகன் மற்றும் தயாரிப்பாளராகவும் இருந்துவருபவர் கமல்ஹாசன் (Kamal Haasan). இவரின் தயாரிப்பில் ரஜினிகாந்தின் (Rajinikanth) தலைவர்173 (Thalaivar173) திரைப்படமும் உருவாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது மீண்டும் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) படத்தை தயாரிக்கவுள்ளார். கடந்த 2024ம் ஆண்டில் வெளியான அமரன் (Amaran) திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில், தற்போது அவரின் புது படமாக அறிவிக்கப்பட்டுள்ள SK 26 படத்தையும் தயாரிக்கவுள்ளது. இந்த புது திரைப்படத்தை தாய் கிழவி (Thaai Kizhavi) திரைப்படத்தை இயக்கியிருந்த அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugeshan) இயக்கவுள்ளார் என கூறப்பட்டுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் மதுரை கிராமப்புற இளைஞனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த விதத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு  எப்போது வெளியாகும் என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி முதல் பார்வை நாளை 2026 பிப்ரவரி 16ம் தேதி மாலை 05:02 மணியளவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகபரவிவருகிறது.

இதையும் படிங்க: 40 நாட்கள் விலகி இருக்கப்போகிறேன்.. ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்!

சிவகார்த்திகேயனின் புது திரைப்படத்தின் முதல் பார்வை ரிலீஸ் அறிவிப்பு பதிவு:

மேலும் சிவகார்த்திகேயனின் SK26 பட அறிவிப்பு போஸ்டரில் சிவகார்த்திகேயன் கையில் வேலுடன் நிற்பது போன்ற காட்சி தெரிகிறது. இப்படமானது, 90ஸ் அல்லது அதற்கு முன் உள்ள காலகட்ட படமாக இருக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

சிவகார்த்திகேயனின் இந்த புது படமானது தற்காலிகமாக SK26 என அழைக்கப்பட்டுவருகிறது. இந்த SK26 திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக ஆரம்பத்தில் கூறப்பட்ட நிலையில், தற்போது சிவகுமார் முருகேசன் இயக்கவுள்ளாராம். பராசக்தி படத்தின் நிகழ்ச்சியில் தனது அடுத்த படம் முழு பொழுதுபோக்கு படமாகவே இருக்கும் என சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார். அந்த விதத்தில் சிவகுமார் முருகேசனுடன் கிராமப்புற கதைக்களத்தில் நடிக்கவுள்ளாராம். இவர் இறுதியாக நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் கிராமத்து இளைஞனாக நடித்திருந்த நிலையில், கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதுபோன்ற ஜானரில் நடிக்கவுள்ளார்.

இதையும் படிங்க: திடீரென திருமணம் செய்துகொண்ட பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை – குவியும் வாழ்த்துக்கள்!

இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக இளம் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த படத்தின் முதல் பார்வை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் இது குறித்த முழு விவரங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.