சில நேரங்களில் சரியான முடிவு எடுக்க இன்னும் சிறிது நேரம் எடுக்கும்… தாய் கிழவி படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்த படக்குழு!
Thaai Kizhavi Movi Release Postponed: தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகி உள்ள படம் தாய் கிழவி. இந்தப் படம் முன்னதாக 20-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது வெளியீட்டு தேதியை படக்குழு ஒத்திவைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராதிகா சரத்குமார். இவர் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகி பல நூறு படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளிலும் தொடர்ந்து பலப் படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் மக்களிடையே தொடர்ந்து மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முன்னதாக பல முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்த நடிகை ராதிகா சரத்குமார் தற்போது தமிழ் சினிமாவில் அம்மா கதாப்பாத்திரங்களிலும், முக்கியமான வேடங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகை ராதிகா சரத்குமார் தற்போது முன்னணி வேடத்தில் நடித்துள்ள படம் தாய் கிழவி. இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியான போதே ராதிகா சரத்குமாரின் தோற்றத்தைப் பார்த்த ரசிகர்கள் வியந்தனர்.
ஆம் தாய் கிழவி படத்திற்காக முற்றிலும் வித்யாசமான தோற்றத்தில் நடித்துள்ளார் நடிகை ராதிகா சரத்குமார். வயது முதிர்ந்த பெண்ணாக இந்தப் படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். இந்த தாய் கிழவி படத்தை இயக்குநர் சிவக்குமார் முருகேசன் எழுதி இயக்கி உள்ளார். இவர் இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




தாய் கிழவி படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்த படக்குழு:
நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரடெக்ஷன்ஸ் இந்த தாய் கிழவி படத்தை தயாரித்துள்ள நிலையில் படம் முன்னதாக பிப்ரவரி மாதம் 20-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது படத்தை வருகின்ற 27-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் வெளியீட்டுத்தேதியை ஒத்திவைத்தது குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
Also Read… சிவகார்த்திகேயன் 26 படத்தின் நாயகி இவரா? வைரலாகும் தகவல்
தாய் கிழவி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Sometimes the right decision takes a little more time.#ThaaiKizhavi in theatres on February 27 ♥️🤶🏻
Same energy. Bigger celebration 🔥@Siva_Kartikeyan @Sudhans2017 @KalaiArasu_ @SKProdOffl pic.twitter.com/QhiN302dzp
— Passion Studios (@PassionStudios_) February 15, 2026
Also Read… Rajinikanth: விஜய்யை ஓவர்டேக் செய்ய நினைக்கும் ரஜினிகாந்த்.. புது படத்தின் சம்பளம் இவ்வளவா?