AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிறகடிக்க ஆசை சீரியல் ரோகிணியின் நிஜ கணவர் இவரா? வைரலாகும் போட்டோ

Siragadikka Aasai serial Rohini: தமிழ் சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறும் சீரியலாக உள்ளது சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் பிரபலமாக உள்ள ரோகிணியின் நிஜ கணவரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியாகி உள்ள நிலையில் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சிறகடிக்க ஆசை சீரியல் ரோகிணியின் நிஜ கணவர் இவரா? வைரலாகும் போட்டோ
சிறகடிக்க ஆசை சீரியல் ரோகிணிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 12 Feb 2026 22:37 PM IST

தமிழ் சினிமாவில் வெள்ளித்திரையில் பிரபலங்களின் சொந்த வாழ்க்கை குறித்து தெரிந்துகொள்வதில் மக்களிடையே உள்ள ஆர்வத்தைப் போல  சின்னத்திரையில் உள்ள பிரபலங்களின் வாழ்க்கையும் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் அவர்களின் குடும்பம் மற்றும் வாழ்க்கை துணை குறித்த தகவல்களும் இணையத்தில் வெளியாகி மக்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் சின்னத்திரையில் அதிக அளவில் மக்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் சீரியலாக உள்ளது சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் கடந்த 2023-ம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியலில் உள்ள நாயகன் மற்றும் நாயகியைத் தவிற மற்ற கதாப்பாத்திரங்களில் நடிப்பவர்களும் ரசிகர்களிடையே தொடர்ந்து விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றனர். இதில் ரோகிணி என்ற கதப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகையின் கதாப்பாத்திரமும் மக்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இந்த ரோகிணி கதாப்பாத்திரம் முதல் திருமணம் நடந்து தனக்கு ஒரு குழந்தை இருப்பதையே மறைத்து இரண்டாவதாக திருமணம் செய்துகொள்வார். அந்த திருமணத்திற்காக பல பொய்களை சொல்லியிருந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக அவர் எப்போது மாட்டுவார் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பே அவரது உண்மை முகம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிந்தது போல காட்டப்பட்டது. தற்போது சீரியல் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

சிறகடிக்க ஆசை சீரியல் ரோகிணியின் நிஜ கணவர் இவர் தான்:

இந்த ரோகிணியின் உண்மையான பெயர் சல்மா. இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த இவர் அருண் என்ற இந்து மதத்தைச் சேர்ந்தவரை காதல் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களின் திருமணம் தொடர்பாக சல்மா பல பேட்டிகளில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சல்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… டாக்டர் பட்டம் பெற்றார் நடிகை ஸ்ரீ லீலா… இணையத்தில் வைரலாகும் வீடியோ

நடிகை சல்மா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Salma (@salma.arun_official)

Also Read… சார்பட்டா 2 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்

Follow Us