சார்பட்டா 2 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்
Sarpatta 2 Movie Shooting Update: தமிழ் சினிமாவில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் சார்பட்டா. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பே வெளியான நிலையில் தற்போது படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் பா ரஞ்சித். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படத்திலேயே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மிகவும் கலகலப்பான படமாக இந்தப் படம் வெளியாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான படம் மெட்ராஸ். முதல் படம் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவாகி இருந்தாலும் இரண்டாவது படத்திலேயே அரசியல் பேசத் தொடங்கிவிட்டார். அதனைத் தொடர்ந்து இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ஏதேனும் ஒரு அரசியலை பேசி வருகின்றது. அந்த வகையில் இவரது இயக்கத்தில் வெளியான கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது மற்றும் தங்கலான் ஆகியப் படங்களை இயக்கி உள்ளார்.
இந்த நிலையில் தற்போது வேட்டுவம் படத்தினை இயக்கி வந்த இயக்குநர் பா ரஞ்சித் அவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுக்க உள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ம் தேதி நேரடியாக சார்பட்டா படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. இதில் நடிகர் ஆர்யா நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை துஷாரா விஜயன் நாயகியாக நடித்து இருந்தார். பாக்ஸிங்கை மையமாக வைத்து உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




சார்பட்டா 2 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது?
அதன்படி ஓடிடியில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று படக்குழு முன்னதாகவே அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து பட்ஜெட் பிரச்சனை காரணமாக படத்தின் படப்பிடிப்பு தொடங்காமல் தாமதம் ஏற்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று தகவல் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் இந்த பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் தொடங்கும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Also Read… 4 ஆண்டுகளைக் கடந்தது விக்ரமின் மகான் படம்… கொண்டாடும் ரசிகர்கள்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#PaRanjith‘s #Sarpatta2 is being made on a huge budget….👏🏼
The shooting of this film is scheduled to begin by the end of this month or next month. pic.twitter.com/cHZ9OEz9Zl
— Movie Tamil (@_MovieTamil) February 11, 2026
Also Read… சரத்குமார் சொன்னதால்தான் தாய் கிழவி படத்தில் நடித்தேன் – நடிகை ராதிகா