Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

4 ஆண்டுகளைக் கடந்தது விக்ரமின் மகான் படம்… கொண்டாடும் ரசிகர்கள்

4 Years Of Mahaan Movie: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகி மக்களிடையே வரவேற்பைப் பெற்ற மகான் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

4 ஆண்டுகளைக் கடந்தது விக்ரமின் மகான் படம்… கொண்டாடும் ரசிகர்கள்
மகான்
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Feb 2026 20:26 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மகான். இந்தப் படத்தினை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் எழுதி இயக்கி இருந்தார். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்களுக்கு என்றே தமிழ் சினிமாவில் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் நாயகனாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் துருவ் விக்ரம் சிம்ரன், பாபி சிம்ஹா, சனந்த், வேட்டை முத்துக்குமார், செம்பருத்தி சஞ்சய், ராமச்சந்திரன் துரைராஜ், கஜராஜ், சுபத்ரா ராபர்ட், தீபக் பரமேஷ், முருகவேல், பெனிட்டோ பிராங்க்ளின், வாணி போஜன், ஆடுகளம் நரேன், பாலாஜி சக்திவேல் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித் குமார் தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல படத்தில் வெளியான பாடல்களும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

4 ஆண்டுகளைக் கடந்தது விக்ரமின் மகான் படம்:

நிஜ வாழ்க்கையில் அப்பா மற்றும் மகனான நடிகர்கள் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்து இருந்த படம் மகான். இந்தப் படத்திலும் இவர்கள் அப்பா மகனாக நடித்து இருந்தனர். காந்திய குடும்பத்தை சேர்ந்த விக்ரமின் தந்தை மிகுந்து கட்டுப்பாடுடன் அவரை வளர்க்கிறார். ஆனால் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் விக்ரமின் மனைவி மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்து அவரை கட்டுப்படுத்திகிறார்கள். இவர் காந்திய வாழ்க்கையை விட்டு வெளியேறிவிட்டார் என்ற கோவத்தில் அவரது குடும்பத்தினர் விலகி செல்கிறார்கள்.

அதனைத் தொடர்ந்து தனது சிறுவயது நண்பன் பாபி சிம்ஹா மற்றும் அவரது மகன் சனந்த் ஆகியோருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இப்படி இருக்கும் சூழலில் தனது அம்மா சிமரனின் வளர்ப்பில் வளர்ந்த துருவ் விக்ரம் தனது தந்தை விக்ரமை பழிவாங்க வருகிறார். அவரது வாழ்க்கையில் பல சிக்கல்களை ஏற்படுத்துகிறார். அதனை விக்ரம் எப்படி சரி செய்தார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Also Read… வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷலாக ரீ-ரிலீஸாகும் காதலர் தினம் படம்… உற்சாகத்தில் ரசிகர்கள்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சென்னையில் தொடங்கியது சூர்யா 47 படத்தின் ஷூட்டிங்… வைரலாகும் தகவல்