AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டாக்டர் பட்டம் பெற்றார் நடிகை ஸ்ரீ லீலா… இணையத்தில் வைரலாகும் வீடியோ

Sreeleela Completes Her MBBS Degree: தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன நடிகை ஸ்ரீ லீலா தற்போது தெலுங்கு, கன்னடா, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

டாக்டர் பட்டம் பெற்றார் நடிகை ஸ்ரீ லீலா… இணையத்தில் வைரலாகும் வீடியோ
ஸ்ரீ லீலாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Feb 2026 16:41 PM IST

தெலுங்கு சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை ஸ்ரீ லீலா (Actress Sreeleela) கடந்த 2019-ம் ஆண்டு கன்னட சினிமாவில் வெளியான கிஸ் என்ற படத்தின் மூலமாக நாயகியகா அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து கன்னட மொழிகளில் தொடர்ந்து நாயகியாக நடித்து வந்த நடிகை ஸ்ரீ லீலா அதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் கடந்த 2021-ம் ஆண்டு பெல்லி சாண்டா என்ற படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார். தொடர்ந்து கன்னடா மற்றும் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை ஸ்ரீ லீலா தற்போது தமிழ் மற்றும் இந்தி மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான பராசக்தி படத்தில் நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து இருந்த நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தற்போது தனுஷின் 55-வது படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

டாக்டர் பட்டம் பெற்றார் நடிகை ஸ்ரீ லீலா:

இந்த நிலையில் தொடர்ந்து படங்களில்  பிசியான நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரீ லீலா தொடர்ந்து தனது படப்பிலும் கவனம் செலுத்தி வந்தார். அதன்படி தொடர்ந்து தனது படிப்பை விட்டுகொடுக்காமல் படித்து வந்த நடிகை ஸ்ரீ லீலா தனது MBBS பட்டத்தைப் பெற்றார். அவர் பட்டம் பெறும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் நடிகை ஸ்ரீ லீலாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read… தனுஷ் நடிப்பில் இளையராஜா பயோபிக் படம் திட்டமிட்டபடி நடக்கும் – அருண் மாதேஸ்வரன்!

இணையத்தில் வைரலாகும் ஸ்ரீ லீலா பட்டம் பெற்ற வீடியோ:

Also Read… கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி – 19 ஆண்டுகளை நிறைவு செய்தது ரவி மோகனின் தீபாவளி படம்!

Follow Us