Jana Nayagan: ஜன நாயகன் பட சென்சார் வழக்கு வாபஸ் – நாளை முதல் வழக்காக உயர் நீதிமன்றத்தில் விசாரணை!
Jana Nayagan Censor Lawsuit Withdrawn: தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தின் சென்சார் பிரச்சனைகாக படக்குழு சார்பாக கடந்த 2026 ஜனவரி 5ம் தேதியில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இன்னும் இந்த வழக்கில் தீர்ப்பு கிடைக்காத காரணத்தால், படக்குழு இந்த வழக்கை வாபஸ் வாங்கியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோலிவுட் சினிமாவில் இந்த 2026ம் ஆண்டு தொடக்கத்திலே ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது, ஜன நாயகன் (Jana Nayagan) படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு தான். இப்படத்தின் ரிலீசிற்கு சில நாட்கள் முன்புவரை சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால், கடந்த 2026 ஜனவரி 5ம் தேதியில் சென்னை உயர் நீதிமன்றத்தில் (Chennai High Court) படக்குழு தணிக்கை வாரியதிற்கு (Censor Board) எதிராக வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கானது இதுவரை கிட்டத்தட்ட 5 விசாரணைக்கும் மேல் சென்றும் தீர்ப்பு கிடைக்கவில்லை. இதன் காரணமாக சென்சார் போர்ட் மீது படக்குழு கொடுத்திருந்த வழக்கை வாபஸ் பெறுகிறது. இது குறித்து தகவல்கள் வெளியாகிவந்த நிலையில், இதன் விசாரணை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி ஜன நாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வின்.என். புரொடக்ஷன்ஸ் (K.V.N. Productions) நிறுவனம், தணிக்கை வாரியதின் மீது தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதாக முடிவு செய்துள்ளது.
இந்த வாபஸ் வழக்கின் விசாரணை நாளை 2026 பிப்ரவரி 10ம் தேதியில் செவ்வாய்கிழமையில் முதல் வழக்காக விசாரிக்கப்படவுள்ளது. தற்போது இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பரவிவருகிறது. மேலும் இதில் என்ன மாதிரியான தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




இதையும் படிங்க: ஓடிடியில் சாதனை படைத்த சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம்.. அப்படி என்ன செய்தது தெரியுமா?
ஜன நாயகன் திரைப்பட சென்சார் வழக்கு வாபஸ் தொடர்பான பதிவு :
#KVNProductions #JanaNayagan pic.twitter.com/CIWNJpWu7T
— Jegan ebi (@jeganebenezar1) February 9, 2026
தளபதி விஜய்யின் இந்த திரைப்படத்தை இயக்குநர் எச். வினோத் இயக்க, கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தளபதி விஜய் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் நிலையில், அவருடன் நடிகர்கள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், அட்லீ , நெல்சன் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் போன்ற பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தனுஷ் நடிப்பில் இளையராஜா பயோபிக் படம் திட்டமிட்டபடி நடக்கும் – அருண் மாதேஸ்வரன்!
இந்த படமானது கடந்த 2026 ஜனவரி 9ம் தேதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இன்னும் இப்படத்தின் சென்சார் பிரச்சனை முடியாத நிலையில், இன்னும் ரிலீஸ் தேதி உறுதிப்படுத்தப்படவில்லை. தற்போது படக்குழு ஜன நாயகன் படத்தை மறுஆய்விற்கு அனுப்பியுள்ளதாம். இந்நிலையில் இதற்கு விரைவில் சென்சார் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்சார் விரைவில் கிடைத்தால் வரும் 2026 பிப்ரவரி 20ம் தேதி அல்லது 26ம் தேதிக்குள் இப்படம் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.