Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரீ ரிலீஸாகும் மௌனம் பேசியதே படம்… நாஸ்டாலஜியை பகிர்ந்த நடிகை லைலா

Actress Laila Video: தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை லைலா. இவரது நடிப்பில் முன்னதாக வெளியான மௌனம் பேசியதே படம் தற்போது ரீ ரிலீஸ் ஆக உள்ள நிலையில் நடிகை லைலா வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகின்றது.

ரீ ரிலீஸாகும் மௌனம் பேசியதே படம்… நாஸ்டாலஜியை பகிர்ந்த நடிகை லைலா
நடிகை லைலாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Feb 2026 22:01 PM IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்கள் ரீ ரிலீஸாகிறது. புதுப் படங்கள் மக்களிடையே வரவேற்பைப் பெறுவது போல இந்த ரீ ரிலீஸ் ஆகும் படங்கள் தொடர்ந்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெறுவது படக்குழுவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. அதன்படி இந்த காதலர் தினத்தை முன்னிட்டு தமிழ் சினிமாவில் முன்னதாக வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 4 படங்கள் ரீ ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு அறிவித்து இருந்தது. மேலும் இந்த 4 படங்களும் காதலர் தினத்தில் வெளியாவது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி மௌனம் பேசியதே, மின்னலே, காதலர் தினம் மற்றும் உயிருள்ளவரை உஷா ஆகியப் படங்கள் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படங்களில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் ரீ ரிலீஸ் ஆவது குறித்து தங்களது மகிழ்ச்சியை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா நடிப்பில் முன்னதாக வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற மௌனம் பேசியதே படம் வருகின்ற 13-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்த மௌனம் பேசியதே படம் சூரியாவின் கெரியரில் பெஞ்ச் மார்க்காக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மௌனம் பேசியதே படம் குறித்து நாஸ்டாலஜியை பகிர்ந்த லைலா:

இந்த நிலையில் இந்தப் படத்தின் ரீ ரிலீஸை முன்னிட்டு நடிகர் சூர்யா முன்னதாக வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில் மௌனம் பேசியதே படத்தி ல்பேசிய வசங்களை பேசி இருந்தார். அந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலான நிலையில் தற்போது நடிகை லைலா மௌனம் பேசியதே படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் அவர் உடன் நடித்த நடிகர்கள் குறித்தும் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… 3 ஆண்டுகளை நிறைவு செய்த டாடா படம்… இயக்குநர் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு

இணையத்தில் வைரலாகும் நடிகை லைலாவின் வீடியோ:

Also Read… Dhanush: நான் நடிக்கவருவதற்கு முன் அந்த வேலையில் ஆர்வம் அதிகம்.. ஆனால் – தனுஷ் பகிர்ந்த விஷயம்!