Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Thaai Kizhavi: ‘தாய் கிழவி’ பட ராதிகாவின் கதாபாத்திரம் – மேக்கிங் வீடியோ வெளியீடு!

Thaai Kizhavi Movie Character Video : தமிழ் சினிமாவில் 80ஸ் சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்துவந்தவர் ராதிகா சரத்குமார். இவர் வயதான வேடத்தில் நடித்துள்ள படம்தான் தாய் கிழவி. தற்போது இப்படத்தில் ராதிகா சரத்குமாரின் கதாபாத்திரம் மேக்கிங் குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Thaai Kizhavi: ‘தாய் கிழவி’ பட ராதிகாவின் கதாபாத்திரம் – மேக்கிங் வீடியோ வெளியீடு!
தாய் கிழவி திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 28 Jan 2026 19:48 PM IST

நடிகை ராதிகா சரத்குமார் (Radhika Sarathkumar) தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) முதல் உலகநாயகன் கமல்ஹாசன் (Kamal Haasan) வரை பல்வேறு உச்ச நட்சத்திர நடிகர்களுடன் ஜோடியாக படங்களில் நடித்திருக்கிறார். 80ஸ் மற்றும் 90ஸ் தொடக்கத்தில் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர் இவர். இவரின் நடிப்பில் தொடர்ந்து பிரம்மாண்ட படங்கள் வெளியாகியிருக்கிறது. தற்போது இவர் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்திவருகிறார். தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) தெறி (Theri) படத்தில் அவருக்கு அம்மா வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். அந்த விதத்தில் இவரை லீட் ரோலில் நடித்துள்ள படம்தான் தாய் கிழவி (Thaai Kizhavi).

இப்படத்தில் ராதிகா சாரதிக்குமார் வயதான வேடத்தில் நடித்திருக்கும் நிலையில், வரும் 2026 பிப்ரவரி 20ம் தேதியில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் ராதிகா சரத்குமாரின் கதாபாத்திரம் உருவாக்கம் குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த மேக்கிங் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: கோச்சடையான் போன்ற அனிமேஷன் படம் வருமா?- சௌந்தர்யா ரஜினிகாந்த் சொன்ன விஷயம்!

ராதிகா சரத்குமாரின் தாய் கிழவி பட கதாபாத்திர மேக்கிங் வீடியோ பதிவு:

இந்த தாய் கிழவி படத்தில் ராதிகா சரத்குமார் முன்னணி வேடத்தில் நடிக்க, நடிகர்கள் சிங்கம் புலி, அருள் தாஸ், முனிஷ் காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்க, சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இவர் ஏற்கனவே பைசன் படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஸ்ருதி ஹாசனின் பர்த்டே ஸ்பெஷல்… போஸ்டரை வெளியிட்ட ஆகாசம்லோ ஓக தாரா படக்குழு

இந்த தாய் கிழவி படமானது முழுக்க ராதிகா சரத்குமாரின் வயதான வேடத்தை மையமாக கொண்டே உருவாகியுள்ளது. இந்த படத்தில் அடாவடி செய்யும் கிழவியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். இதில் அவர் இறந்த பின் நடக்கும் சம்பவங்கள் குறித்து இந்த படத்தின் கதை தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் நகைச்சுவை, எமோஷனல் போன்ற கதைக்களத்தில் தயாராகியுள்ளதாம். இப்படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.