Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியானது தாய் கிழவி படத்தின் டீசர்

Thaai Kizhavi Movie Official Teaser | தமிழ் சினிமாவில் 80களில் நாயகியாக கலக்கி வந்த நடிகை ராதிகா சரத்குமார் தற்போது அம்மா கதாப்பாத்திரம், சிறப்பு கதாப்பாத்திரம் என தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் தற்போது தாய் கிழவி படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியானது தாய் கிழவி படத்தின் டீசர்
தாய் கிழவிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 24 Dec 2025 21:02 PM IST

தமிழ் சினிமாவில் பல நூறு படங்களில் நடித்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகை ராதிகா சரத்குமார். இவர் 80 மற்றும் 90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நாயகியாக நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 2000 ஆண்டுக்கு பிறகு பலப் படங்களில் அண்ணி, அக்கா மற்றும் அம்மா கதாப்பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார் நடிகை ராதிகா சரத்குமார். தொடர்ந்து படங்களில் மட்டும் இல்லாமல் அவரே தயாரித்து பல சீரியல்களிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல தொடர்ந்து சீரியல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் நிலையில் தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள தாய் கிழவி படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரடெக்‌ஷன் உடன் இணைந்து பேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. கிராமத்து பிண்ணனியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் வயது முதிர்ந்த பெண்ணாக நடித்துள்ளார் என்பது வீடியோவைப் பார்க்கும் போது தெரிகிறது.

ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியானது தாய் கிழவி படத்தின் டீசர்:

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் நாயகியாக நடித்துள்ள நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் சிங்கம் புலி, அருள் தாஸ், பால சரவணன், முனிஷ்காந்த், இளவரசு, ஜார்ஜ் மேரியன், முத்துக்குமார், ரேச்சல் ரபேக்கா ஆகியோர் இணைந்து இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… ஜன நாயகன் படத்தின் வட இந்திய திரையரங்கு உரிமைகளை பெற்றது ஜீ ஸ்டுடியோஸ்!

தாய் கிழவி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? படக்குழு கொடுத்த அப்டேட்