AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தொடர் தோல்வி படங்கள்.. 2 ஆண்டுக்கும் மேல் எந்த படமும் இல்லை – இந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் எந்த நடிகர் தெரியும்?

Tamil Celebrity Childhood Photo: இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோ. இவர் திரிஷா முதல் நயன்தாரா வரை போன்ற நடிகைகளுடன் ஜோடியாக படங்களில் நடித்திருக்கிறார். இப்புகைப்படத்தில் இந்த சிறுவன் யாருனு தெரியுமா. யார் என விவரமாக பார்க்கலாம்.

தொடர் தோல்வி படங்கள்.. 2 ஆண்டுக்கும் மேல் எந்த படமும் இல்லை – இந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் எந்த நடிகர் தெரியும்?
தமிழ் பிரபலத்தின் சிறுவயது போட்டோImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 12 Feb 2026 17:40 PM IST

கோலிவுட் சினிமாவில் (Kollywood Cinema) பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இருந்து வருகின்றனர். அவர்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களிடையே பரவிவருவது வழக்கமே. அந்த விதத்தில் மேலே இருக்கும் புகைப்படத்தில் உள்ள சிறுவன் எந்த நடிகர் என தெரியுமா?. இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடந்த 2002ம் ஆண்டில் இயக்குநர் விஷ்ணுவர்தன்(Vishnuvardhan) இயக்கத்தில் சினிமாவில் கதாநாயகனாக நுழைந்தார். இவர் அறிமுகமான முதல் படத்திலே அவருக்கு பல விருதுகள் கிடைத்திருந்தது. இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் படங்களில் நடித்துள்ளார். இந்த நடிகர் சில ஆண்டுகளுக்கு முன் தனது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க, ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தியிருந்தார். அதில் பல பெண்கள் கலந்துகொண்டு பின், அந்த நிகழ்ச்சி இறுதியில் இந்த நடிகர் யாரையுமே திருமணம் செய்யவில்லை. இப்போது இந்த நடிகர் யார் என தெரிந்திருக்கும். தற்போது இந்த நடிகர், அவருடன் நடித்த நடிகையே திருமணம் செய்துகொண்டார்.

தற்போது இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. மேலும் 2 ஆண்டுகளாக இவரின் நடிப்பில் தமிழில் படங்களும் வெளியாகவில்லை. அதற்கு முன் இவரின் நடிப்பில் கடந்த 3 ஆண்டுகளாக வெளியான தமிழ் படங்கள் வெற்றியை பெறவில்லை. இந்த சிறுவன் வேறுயாருமில்லை, நடிகர் ஆர்யா தான் (Arya).

இதையும் படிங்க: ரவி மோகன் வந்தபிறகு என் வாழ்க்கையே மாறியது – பாடகி கெனிஷா எமோஷனல் பதிவு!

நடிகர் ஆர்யாவின் இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Arya (@aryaoffl)

நடிகர் ஆர்யாவின் சினிமா பயணம் :

நடிகர் ஆர்யா கடந்த 2002ம் ஆண்டில் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான “அறிந்தும் அறியாமலும்” என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இதையடுத்து உள்ளம் கேட்குமே, ஒரு கல்லூரியின் கதை. களப காதலன், பட்டியல் மற்றும் நான் கடவு என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அதிலும் இவர் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் மட்டுமே நான் கடவுள் மற்றும் அவன் இவன் என 2 படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: மௌனம் பேசியதே ரீ-ரிலீஸ் படத்தை கண்டிப்பாக பாருங்க – திரிஷா கிருஷ்ணன் வெளியிட்ட வீடியோ!

அந்த விதத்தில் இவர் சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்துவரும் நிலையிலும் இவருக்கு படங்கள் வரவேற்கப்படவில்லை. தமிழில் இவரின் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் இவருக்கு தொடர் தோல்வி படமாகவே அமைந்திருந்தது. அதிலும் கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக இவரின் நடிப்பில் தமிழில் எந்த படங்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இவரின் நடிப்பில் தமிழில் மிஸ்டர் எக்ஸ், அனந்தன் காடு மற்றும் வேட்டுவம் போன்ற படங்கள் உள்ளது. மேலும் விரைவில் சார்பட்டா 2 படமும் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us