Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த சிறுவன் யார் தெரியுமா? தயாரிப்பாளர் மகன் டூ ஹீரோ

Tamil Celebrity Childhood Photo: தென்னிந்திய சினிமாவில் பல்வேறு நட்சத்திர நடிகர்கள் தங்களின் திறமையின் மூலம் முன்னேறி வருகிறார்கள். அதுபோல் தயாரிப்பாளரின் மகனாக இருந்து, திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது பல படங்களில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்திருப்பவர்தான் இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன்.

இந்த சிறுவன் யார் தெரியுமா? தயாரிப்பாளர் மகன் டூ ஹீரோ
தமிழ் நடிகரின் சிறுவயது புகைப்படம் Image Source: Social media
Barath Murugan
Barath Murugan | Published: 30 Jan 2026 08:30 AM IST

தமிழ் சினிமாவில் (Tamil Cinema) தொடர்ந்து பல்வேறு நடிகர்கள் தங்களின் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். அதில் பல பேர் அடிமட்டத்தில் இருந்து துணை நடிகர், நடிக்கராக முன்னேறி தற்போது தமிழில் உச்ச நடிகர்களாக படங்களில் நடித்துவருகிறார்கள். அந்த விதத்தில் அந்த பிரபலங்களின் அடையாளம் தெரியாத சிறுவயது அல்லது குழந்தை பருவப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. அந்த விதத்தில் மேலே இருக்கும் புகைப்படத்தில் உள்ள அந்த சிறுவன் யாருனு தெரியுமா?. இவர் சிறுவயதிலேயே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டவர். இவரின் தந்தை பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு தயாரிப்பாளர். இவரின் தயாரிப்பு நிறுவனம்தான் சூப்பர் குட் பிலிம்ஸ் (Super Good Flims). இந்த நிறுவனத்தின் கீழ் இதுவரை 98 படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் அந்த பிரபலமும் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாகவே சினிமாவில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டார். இந்த நடிகரின் முதல் திரைப்படத்தை இயக்கியவர் இயக்குநர் ரவி மரியா (Ravi Mariya) இயக்கியிருந்தார். இப்படம் 2003ல் வெளியான நிலையில், அந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

பின் அதே ஆண்டில் இயக்குநர் பிருந்தா சாரதி இயக்கத்தில் வெளியான படத்தில் நடித்தார். இந்த பிரபல நடிகர் தளபதி விஜய்யுடனும் (Thalapathy Vijay) படத்தில் இணைந்து நடித்திருக்கிறார். இறுதியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவேண்டிய ஜன நாயகன் (Jana Nayagan) படத்திற்கு பதிலாக, 2026ம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த பிரபலத்தின் படம் வெளியாகியிருந்தது. அட இந்த பிரபலம் தயாரிப்பாளரும், நடிகருமான ஜீவாதான் (Jiiva).

இதையும் படிங்க: அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜின் AA23 – கதாநாயகி யார் தெரியுமா?

நடிகர் ஜீவாவின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Jiiva (@actorjiiva)

சினிமாவில் ஹீரோவாக ஜீவா வளர்ந்த பாதை :

நடிகர் ஜீவா பிரபல தயாரிப்பாளரான ஆர்.பி.சௌத்ரியின் மகன் ஆவார். இவர் தனது சிறுவயதிலே படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். பெரும்புள்ளி, சேரன் பாண்டியன் போன்ற படங்களில் குழந்தை நச்சத்திரமாக நடித்திருந்தார். பின் இயக்குநர் ரவி மரியா இயக்கத்தில் 2003ல் வெளியான “ஆசை ஆசையாய்” என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டார். இந்த படம் அவருக்கு வரவேற்பை கொடுக்கவில்லை. பின் இயக்குநர் பிருந்தா சாரதியின் இயக்கத்தி வெளியான “தித்திக்குதே” என்ற படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதேவி நடித்திருந்தார்.

இதையும் படிங்க: அந்த படம் சிம்பு கூட பண்ணமாட்டேனு சொல்லிட்டேன் – கே எஸ்.ரவிக்குமார் உடைத்த உண்மை!

மேலும் ராம், டிஷ்யூம், ஈ, பொறி, தெனாவெட்டு, சிவா மனசுல சக்தி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் இவர் தளபதி விஜய்யுடன் நண்பன் படத்திலும் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக தலைவர் தம்பி தலைமையில் என்ற அரசியல் காமெடி படம் வெளியாகி சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.