Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

AA23 Movie: அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜின் AA23 – கதாநாயகி யார் தெரியுமா?

AA23 Movie Heroine Update: தமிழ் சினிமாவில் அதிரடி இயக்குநராக இருந்துவருபவர் லோகேஷ் கனகராஜ். இவரின் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள படம்தான் AA23. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஒருவர் நடிக்கவுள்ளாராம். அது யார் என்பது குறித்து பார்க்கலாம்.

AA23 Movie: அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜின் AA23 – கதாநாயகி யார் தெரியுமா?
அல்லு அர்ஜுன் மற்றும் ஷ்ரத்தா கபூர்Image Source: Social media
Barath Murugan
Barath Murugan | Published: 29 Jan 2026 17:09 PM IST

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) மாநகரம் (Maanagaram) என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக நுழைந்தார். பின் இவரின் இயக்கத்தில் வெளியான கைதி (kaithi) படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவ்வாறு மக்களிடையே பிரபலமான இவர் தனது 3வது படத்தையே தளபதி விஜயை (Thalapathy Vijay) வைத்து மாஸ்டர் (Mastar) படத்தை எடுத்தார் . இந்த படம் சூப்பர் ஹிட்டாக கமல்ஹாசன் (Kamal Haasan), ரஜினிகாந்த் (Rajinikanth) உள்ளிட்ட பிரம்மாண்ட நடிகர்களை கொண்டு படத்தை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். இவரின் 6வது திரைப்படமாக இறுதியாக வெளியானது கூலி (Cooli). இப்படத்தில் நாகார்ஜுனா, ரஜினிகாந்த், ஆமிர்கான் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தை அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக டிசி என்ற படத்தி நடிக்கிறார். இந்த படத்தை அடுத்ததாக கைதி 2 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் (Allu Arjun) AA23 என்ற படத்தை இயக்கவுள்ளார்

லோகேஷ் கனகராஜ் தற்போது இந்த படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகளில் இவர் பிசியாக இருக்கும் நிலையில், இதன் அறிவிப்பு கடந்த 2026 ஜனவரி 14ம் தேதியில் வெளியாகியிருந்தது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக எந்த நடிகை நடிக்கிறார் என எதிர்பார்க்கப்பட்டுவந்த நிலையில், பாலிவுட் பிரபல “நடிகை ஷ்ரத்தா கபூர்” (Shraddha Kapoor) நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் – கமல் ஹாசன் மீண்டும் இணையும் படத்தை இயக்கும் பிரபல இயக்குநர்

அல்லு அர்ஜுன் மற்றும் லோகேஷ் கனகராஜின் AA23 பட அறிவிப்பு பதிவு:

அல்லு அர்ஜுனின் AA23 திரைப்படத்தின் ஷூட்டிங் எப்போது தொடக்கம்:

இந்த AA23 திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் முற்றிலும் ஆக்ஷன் கதைக்களத்தில் நடிக்கிறாராம். இந்த படமானது லோகேஷின் LCU பட தொகுப்பில் ஒரு படமாக உருவாக்குவதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துவருகிறார். இவரின் இவரின் இசையில் லோகேஷ் கனகராஜின் படங்கள் தொடர்ந்து உருவாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அல்லு அர்ஜூனுடன் லோகேஷ் கனகராஜ் இணைந்து நடிக்கும் நிலையில், முக்கிய வில்லனாக பாலிவுட் நடிகர் நடிப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ரீ ரிலீஸாகும் சூப்பர் ஹிட் ஜோடி சூர்யா – ஜோதிகாவின் காக்க காக்க படம்

மேலும் தமிழ் நடிகர் ஒருவரும் இப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2026 ஏப்ரல் அல்லது மே மாதத்தின் தொடக்கத்தில் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் தற்போது அட்லியின் AA22 படத்தின் ஷூட்டிங்கில் இருக்கும் நிலையில், இதையடுத்து இந்த படத்தில் இணைவார் என்பது குறிப்பிடத்தக்கது.