AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜன நாயகன் பட விவகாரம் சரியாகக் கையாளப்படவில்லை – பவன் கல்யாண்!

Pawan Kalyan talks about Jana Nayagan Issue: தெலுங்கு சினிமாவில் அரசியல் தலைவராகவும் முன்னணி நாயகனாகவும் வலம் வரும் பவன் கல்யாண் தளபதி விஜயின் ஜன நாயகன் படத்தின் நிலவரம் மற்றும் கரூர் சம்பவம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜன நாயகன் பட விவகாரம் சரியாகக் கையாளப்படவில்லை – பவன் கல்யாண்!
பவன் கல்யாண்
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Mar 2026 06:14 AM IST

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றத்தை அளித்தப் படம் ஜன நாயகன். இந்தப் படத்தில் நடிகர் தளபதி விஜய் நாயகனாக நடித்து உள்ளார். இயக்குநர் எச்.வினோத் எழுதி இயக்கி உள்ள இந்தப் படம் கடந்த ஜனவரி மாதமே திரையரங்குகளில் வெளியாவதாக இருந்தது. ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்தப் படம் குறிப்பிட்ட நேரத்தில் வெளியாகாமல் தள்ளிப்போனது. தொடர்ந்து இந்த சென்சார் பிரச்சனை நீண்டுகொண்டே இருக்கின்றது. அதன்படி தற்போது ஜன நாயகன் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு படக்குழு அனுப்பியுள்ள நிலையில் முன்னதாக ரிவைசிங் கமிட்டி உறுப்பினருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஒத்திவைப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் வருகின்ற 17-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு ரிவைசிங் கமிட்டி ஜன நாயகன் படத்தை பார்க்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் நடிகர் விஜய் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதால் தற்போது சென்சார் சான்றிதழ் கிடைத்தாலும் தேர்தலுக்கு முன்பு வெளியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தேர்தலின் முடிவு வெளியாவதற்கு முன்னதாக படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த நிலையில் ஜன நாயகன் விவகாரம் குறித்து பவன் கல்யாண் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜன நாயகன் பட விவகாரம் சரியாகக் கையாளப்படவில்லை:

பவன் கல்யான் பேசியதாவது, ஜனநாயகன் விவகாரம் கையாளப்பட்ட விதம் சரியாக இல்லை என்றே நான் கருதுகிறேன். நீதிமன்றத்தை நாடியிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை; மேலும், இதற்காக NDA-வை குறை கூறுவதிலும் எந்த நியாயமும் இல்லை.

திரு. விஜய் அவர்களின் கூட்டம் தொடர்பாக, அனுமதி மறுக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இது போன்ற சூழல்களை நானும் நேரடியாகவே எதிர்கொண்டிருக்கிறேன். மேலும், CBI அமைப்பு ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுவதையும் நான் நம்பவில்லை. கரூர் விவகாரத்தைப் பொறுத்தவரை, CBI விசாரணை கோரியதே அவர்கள்தானே?

Also Read… விடுதலை படத்தின் ஷூட்டிங்கிலேயே வெற்றிமாறன் அரசன் படத்தின் கதையை கூறினார் – விஜய் சேதுபதி சொன்ன விசயம்

நான் NDA கூட்டணியில் அங்கம் வகித்தபோதிலும், எனது ‘OG’ திரைப்படத்திற்கு எவ்வாறு “A” சான்றிதழ் கிடைத்தது என்று எனது தயாரிப்பாளர்களே என்னிடம் வியப்புடன் கேட்டனர். அதற்கு நான் அளித்த பதில் மிக எளிமையானது: அரசியல் ரீதியாக ஒரு கூட்டணியுடன் இணைந்திருப்பதாலேயே, விதிமுறைகள் வளைக்கப்பட்டுவிடும் என்று அர்த்தமல்ல. நான் எனது அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்திக்கொள்ள முயன்றிருந்தால்கூட, ‘அரசியலையும் சினிமாவையும் ஒன்றோடு ஒன்று கலக்கக் கூடாது’ என்றே அவர்கள் கூறியிருப்பார்கள் என்று பவன் கல்யாண் தெரிவித்து இருந்தார்.

Also Read… ஸ்கூல் படிக்கும் போதே ஏ.ஆர்.ரஹ்மான் சாரிடம் அதை செய்துள்ளேன் – சாய் அபயங்கர் ஓபன் டாக்

Follow Us