Nani: கொதித்தெழும் சூறாவளி.. அதிரடியாக வெளியான நானியின் ‘தி பாரடைஸ்’ பட டீசர்!
The Paradise Teaser Drops: தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் நேச்சுரல் ஸ்டார் நானி. இவரின் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் மற்றும் கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ள புது திரைப்படம் தி பாரடைஸ். அதிரடி கதையில் உருவாகிவரும் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது.
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக இருப்பவர் நானி (Nani). இவர் வெறும் நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் படங்களை தயாரித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஹிட் 3 (HIT 3). கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கும் பின் தெலுங்கு இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா (Srikanth Odela) இயக்கத்தில், நானி நடித்துவந்த திரைப்படம்தான் தி பாரடைஸ் (The Paradise). இந்த படமானது அதிரடி ஆக்ஷன் கதை மற்றும் கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் (Anirudh) இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் நானி ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் (Kayandu Lohar) நடித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக நடைபெற்றுவந்த நிலையில், தற்போது இதன் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: எனது அந்தப் படத்தில் கமல் சார் தான் முதலில் நடிக்க வேண்டியது – மாதவன் சொன்ன விசயம்!
நடிகர் நானியின் தி பாரடைஸ் படக்குழு வெளியிட்ட டீசர் குறித்த எக்ஸ் பதிவு:
JADALA ZAMANA SHURU 🔥#TheParadiseTeaser out now!
▶️ https://t.co/dcSrB8n9BaGRAND RELEASE WORLDWIDE ON 24.09.26.
Natural Star @NameisNani in an @odela_srikanth cinema ❤️🔥
An @anirudhofficial musical 🎼 #JadalZamanaFromSep24#TheParadise @themohanbabu @11Lohar… pic.twitter.com/bpRsghb3qh— SLV Cinemas (@SLVCinemasOffl) August 6, 2026
அதிரடியாக வெளியான தி பாரடைஸ் பட டீசர் எப்படி இருக்கு:
இந்த படத்தில் நானி ஒரு மக்களின் நாயகனாக இருக்கிறார். தனது கோட்டத்தில் இருக்கும் மக்களை காப்பாத்துவதற்கு அவர் படும் பாடு, அதிரடி கேங்ஸ்டர்களிலிருந்து அவர் அவரின் மக்களை எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பதை பற்றிய கதையாக தெரிகிறது. இந்த படத்தில் சிறப்பு பாடல் ஒன்றில் கீர்த்தி சுரேஷ் நடனமாடுவதாக தெரிகிறது. மேலும் இந்த படத்தின் டீஸருடன் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தி பாரடைஸ் படத்தின் ரிலீஸ் எப்போது:
இந்த தி பாரடைஸ் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள நிலையில், இதன் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் நானி மற்றும் கயாடு லோஹருடன் நடிகர்கள் மோகன் பாபு, சோனாலி குல்கராணி போன்ற பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: உதயநிதி பேசுனது தப்பு-னால தான் போலீஸ் அரெஸ்ட் பண்ணாங்க – விஷால்!
இந்த படமானது இறுதிக்கட்ட நிலையில், இப்படம் ஆரம்பத்தில் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என கூறப்பட்டது. பின் அதன் ஷூட்டிங் முடியாத நிலையில், பின் ஒத்திவைக்கப்பட்டது. இன்னும் இதன் ஷூட்டிங் முடியாத காரணத்தால் வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.