AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

The Paradise: நானியின் பர்த்டே கொண்டாட்டம்.. ‘தி பாரடைஸ்’ படத்திலிருந்து வெளியான முதல் பாடல் இதோ!

Nanis Birthday Treat: நானி நடிப்பில் மிக பிரம்மாண்டமான ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராகிவரும் படம்தான் தி பாரடைஸ். இதில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துவரும் நிலையில், இன்று 2026 பிப்ரவரி 24ம் தேதியில் நானியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு முதல் பாடலை வெளியிட்டுள்ளது.

The Paradise: நானியின் பர்த்டே கொண்டாட்டம்.. ‘தி பாரடைஸ்’ படத்திலிருந்து வெளியான முதல் பாடல் இதோ!
தி பாரடைஸ் முதல் பாடல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 24 Feb 2026 20:25 PM IST

தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் நானி (Nani). இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. தற்போது தெலுங்கு சினிமாவில் லீட் கதாநாயகனாக இவர் நடித்துவரும் நிலையில், பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் ஹிட் 3 (HIT 3). இப்படத்தில் நானி மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி (Srinidhi Shetty) இணைந்து நடித்திருந்தனர். கடந்த 2025 மே மாதத்தில் வெளியான இந்த திரைப்படம் சுமார் ரூ 250 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. இதை தொடர்ந்து வரிசையாக புது திரைப்படங்களில் இவர் இணைந்து நடித்துவருகிறார். அந்த வகையில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா (Srikanth Odela) இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம்தான் “தி பாரடைஸ்” (The Paradise).

இதில் நானி அதிரடி கேங்ஸ்டராக நடித்துவருகிறார். இந்நிலையில் இன்று 2026 பிப்ரவரி 24ம் தேதியில், நானி தனது 42வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக தி பாரடைஸ் படத்திலிருந்து, “ஆயா ஷேர்” (Ayaa Sher) என்ற முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இதையும் படிங்க: விஷால் – தமன்னா கூட்டணி : தொடங்கியது ‘புருஷன்’ படத்தின் ஷூட்டிங்!

நடிகர் நானியின் தி பாரடைஸ் படத்தின் முதல் பாடல் குறித்து வெளியான பதிவு:

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துவருகிறார். இவரின் இசையமைப்பில் இப்படத்தின் டீசரானது பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள முதல் பாடலான “ஆயா ஷேர்”, பாடலானது ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்த் படலானது நானியின் பிறந்தநாளின் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

தி பாரடைஸ் படத்தின் கதாநாயகி யார் :

இந்த தி பாரடைஸ் திரைப்படத்தில் நடிகர் நானியுடன் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துவருகின்றனர். குறிப்பாக நடிகர்கள் மோகன் பாபு, ராகவ் மற்றும் நடிகை சோனாலி குலகாரணி போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துவருகின்றனர்.

இதையும் படிங்க : நான் யாருக்கும் போட்டியாகவோ, காலி பண்ணவோ வரவில்லை – எமோஷ்னலாக பேசிய சிவகார்த்திகேயன்

ஆரம்பத்தில் இப்படம் 2026 மார்ச் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், ஷூட்டிங் இன்னும் நிறைவடையாத காரணத்தால் ஒத்திவைத்துள்ளது. அதன்படி வரும் 2026 ஆகஸ்ட் 21ம் தேதியில் உலகமெங்கும் இப்படம் வெளியாகவுள்ளதாம். இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி யார் என ரசிகர்கள் எதிர்பாராத நிலையில், டிராகன் திரைப்படத்தில் நடித்த நடிகை கயாடு லோஹர்தான் கதாநாயகியாக நடிக்கவுள்ளாராம். தற்போது இது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.