AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Vishal: உதயநிதி பேசுனது தப்பு-னால தான் போலீஸ் அரெஸ்ட் பண்ணாங்க – விஷால்!

Vishal on Udhayanidhis Arrest: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், நடிகர்கள் சங்க பொதுச் செயலாளராக இருந்துவருபவர்தான் விஷால். இவர் இயக்குநராகவும், நடிகராகவும் பணியாற்றியுள்ள மகுடம் படம் விரைவில் வெளியாகிறது. இது தொடர்பான நேர்காணல் ஒன்றில் பேசிய விஷால், உதயநிதியை போலீஸ் கைது செய்தது குறித்து பேசியுள்ளார்.

Vishal: உதயநிதி பேசுனது தப்பு-னால தான் போலீஸ் அரெஸ்ட் பண்ணாங்க – விஷால்!
உதயநிதி ஸ்டாலின் பற்றி விஷால்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 06 Aug 2026 18:21 PM IST

கோலிவுட் சினிமாவில் செல்லமே (Chellame) என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விஷால் (Vishal). இவர் கடந்த 2004ம் ஆண்டில் வெளியான இப்படத்திற்கு பின், தமிழில் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான படம் மத கஜ ராஜா (Madha Gaja raja). கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் ஒத்திவைப்பிற்கு பின், கடந்த 2025ம் ஆண்டில் வெளியானது. இப்படத்தை அடுத்ததாக விஷாலின் நடிப்பில் மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள புது படம்தான் மகுடம் (Magudam). இதை இயக்குநர் ரவி அரசு (Ravi Arasu) ஆரம்பத்தில் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பின் விஷால் இயக்கி நடித்துவந்தார். இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது.

மேலும் இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இதனால் இப்படத்தின் புரோமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது. அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய விஷால், சமீபத்தில் திமுக (DMK) துணைத்தலைவர் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) கைது செய்யப்பட்டது குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவின் தமிழ்படம் 3 ஷூட்டிங் எப்போது? வைரலாகும் தகவல்

திமுக துணைத்தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்டது குறித்து பேசினாய் விஷால்:

அந்த பேட்டியில் பேசிய விஷால், “சில விஷயங்களை தவிர்க்கலாம், சில நேரம் அந்த சூழ்நிலையில் அதை பேசிவிடுவார்கள், அதுபோலத்தான் அரசியல். அரசியல் ஸ்க்ரிப்ட்-டாக இருக்கும்போது வேறு, தற்செயலாக இருக்கும்போது வேறு. சினிமாவில் நானும் சில விஷயங்களை பேசும்போது, அது பலருக்கும் விமர்சனமாக ஆக்கும்போதும், கேக்கும் போதும் தெரியும். ஒரு லோயலா காலேஜ் சீனியர், என்னுடன் படித்த மற்றொரு லோயலா காலேஜ் நபரை கைது செய்வார் என நான் கனவிலும் கூட நினைத்ததில்லை. உதயநிதியும் பல விஷயங்களை பார்த்திருக்கிறார். விஜய் த்ற்போது அரசியலில் இருக்கிறார். நீங்கள் சொன்னது தவறு என்பதாலே போலீஸ் வந்து உங்களை கைது செய்தார்கள்.

இதையும் படிங்க: An Ordinary Man டைட்டில் படத்தின் முதல் சாய்ஸ் இல்லை – இயக்குநர் ரவி மோகன்

பின் விசாரணைக்கு பிறகு விடுதலை செய்துவிட்டார்கள். அதற்கான வாக்குவாதளங்களும் நடந்திருக்கிறது. இதை தவிர்த்திருக்கலாம், அதை தவிர்த்திருக்கலாம் என்று. அரசியல் என்றால் இதுதான், வேறு என்ன எதிர்பார்க்கமுடியும். எதிர்க்கட்சியாக இருக்கும்போது, நீங்கள் புது முதல்வரை விமர்சிக்கும்போது, இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படத்தான் செய்யும். மேலும் கடந்த காலத்தில் அவர்கள் இவ்வாறு வர்ணிக்கும்போது இவ்வாறு நடந்திருக்கிறது” என அதில் விஷால் தெரிவித்திருந்தார்.

முதலமைச்சர் விஜயை சந்தித்தது தொடர்பாக விஷால் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

நடிகர் விஷால் வெறும் நடிகராக மட்டுமல்லமல், சில சமுக சேவைகளையும் செய்துவருகிறார். மேலும் இவர்அதிகமாக அரசியல் ஆர்வம் கொண்டவரும் கூட. நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துவரும் நிலையில், இவரும் அரசியல் வருவதற்கு வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us