An Ordinary Man டைட்டில் படத்தின் முதல் சாய்ஸ் இல்லை – இயக்குநர் ரவி மோகன்
Ravi Mohan talks about An Ordinary Man Movie | நடிகர் ரவி மோகன் தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்து படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் அவரது இயக்கத்தில் உருவாகி அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள An Ordinary Man என்ற படம் குறித்து ரவி மோகன் பேட்டியில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகன்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். தொடர்ந்து நடிகர் ரவி மோகன் நாயகனாக நடித்த படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவர் நாயகனாக மட்டும் இன்றி அவ்வபோது சினிமாவில் வில்லன் வேடத்திலும் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் ரவி மோகன் சமீபத்தில் வில்லன் வேடத்தில் நடித்த பராசக்தி படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து அவரது நடிப்பில் அடுத்தடுத்து நாயகனாக நடித்தப் படங்களும் திரையரங்குகளில் வெளியாக வரிசையாக காத்திருக்கின்றது. ஒரு பக்கம் இவர் நடிக்கும் படங்களின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் இயக்குநராக இவர் இயக்கும் படம் தொடர்பான அப்டேட்டும் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.
அதன்படி நடிகர் ரவி மோகன் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆக உள்ள படம் அன் ஆர்டினரி மேன். இந்தப் படத்தில் நடிகர் யோகி பாபு நாயகனாக நடித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் இயக்குநர் ரவி மோகன் சமீபத்திய பேட்டி ஒன்றில் படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




An Ordinary Man டைட்டில் படத்தின் முதல் சாய்ஸ் இல்லை:
அன் ஆர்டினரி மேன் படத்தின் தலைப்புக்கு கடவுள் என்பதே எனது முதல் தேர்வாக இருந்தது. ஆரம்பத்தில் அதையேதான் நான் விரும்பினேன். அனைத்து மொழிப் பார்வையாளர்களையும் சென்றடையும் வகையில், அந்தத் தலைப்புக்குக் கீழே ‘காட் என்ற ஆங்கில வார்த்தையையும் சேர்க்கத் திட்டமிட்டிருந்தேன். ஆனால், இது கடவுள் அல்லது மதம் சார்ந்த படம் என்று மக்கள் தவறாகக் கருதக்கூடும் என்பதைப் பிறகு உணர்ந்தேன். உண்மையில் இது மனிதநேயம் குறித்த ஒரு படமாகும் என்று இயக்குநர் ரவி மோகன் அந்தப் பேட்டியில் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read… ஏஜிஎஸ் நிறுவனத்தில் அதிக லாபம் ஈட்டியது தளபதி விஜயின் படம் தான் – தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#RaviMohan about #AnOrdinaryMan
– Kadavul was my first choice for the title, and that’s the one I initially wanted. I even planned to place the word GOD beneath the title so it would connect with audiences across all languages.
– But then I realized that people might assume it’s…— Movie Tamil (@_MovieTamil) August 5, 2026
Also Read… அன்பே சிவம் படத்திற்கு நோ சொல்ல இதுதான் காரணம் – கே.எஸ்.ரவிக்குமார்