AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கார்த்திக் சுப்பராஜின் டோரதி படத்தின் டீசரை வெளியிட்ட தனுஷ் – வைரலாகும் வீடியோ

Dorothy Movie Tamil Official Title Teaser | இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 10-வதாக உருவாகி உள்ள படம் டோரத்தி. இந்தப் படத்தில் டைட்டில் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள நிலையில் அது இணையத்தில் ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகின்றது.

கார்த்திக் சுப்பராஜின் டோரதி படத்தின் டீசரை வெளியிட்ட தனுஷ் – வைரலாகும் வீடியோ
டோரதிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Aug 2026 08:00 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்களை இயக்குவது மட்டும் இன்றி சிறந்த படங்களை தயாரித்தும் வருகின்றார். கடந்த 2012-ம் ஆண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இதுவரை 9 படங்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தற்போது 10-வது படமாக உருவாகி உள்ளது டோரதி. படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியான போது அதில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகர்கள் சனந்த் மற்றும் ரிஷி காந்த் இருவரும் இணைந்து நடிப்பது தெரியவந்தது. மேலும் அந்த போஸ்டரில் நடிகை கீர்த்தி சுரேஷ் மையத்தில் இருந்த நிலையில் இந்து ஒரு நாயகியை மையமாக வைத்து உருவாகும் படம் என்பது போல தெரிகின்றது.

மேலும் நடிகை கீர்த்தி சுரேசும் சமீப காலமாக அதிக அளவில் நாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்களிலேயே நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகும் படங்களில் பெண்களின் கதாப்பாத்திரங்கள் பெரும்பாலும் மிகவும் வலிமை வாய்ந்ததாக காட்டப்படும். அதன் காரணமாக இந்தப் படமும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கார்த்திக் சுப்பராஜின் டோரதி படத்தின் டீசரை வெளியிட்ட தனுஷ்:

இந்த டோரதி படத்தின் போஸ்டர் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது படத்தில் டைட்டில் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டு இருந்தார். மேலும் இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் எழுதி இயக்கி உள்ள நிலையில் இசைஞானி இளையராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 25-ம் தேதி 2026-ம் ஆண்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Also Read… அரசன் படத்தில் சிம்புவின் அம்மாவா நான்? – விளக்கம் கொடுத்த ஆண்ட்ரியா ஜெர்மையா

நடிகர் தனுஷ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக் பாஸ் சீசன்10ல் பங்குபெறும் சின்னத்திரை பிரபலங்கள்.. அடடே இவர்களா?

Follow Us