AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கார்த்திக் சுப்பராஜின் 10-வது பட நாயகியாகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்

Director Karthik Subbaraj Dorothy movie poster viral on social media | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் 10-வதாக உருவாக உள்ள படத்திற்கு டோரத்தி என்று பெயர் வைத்துள்ளனர்.

கார்த்திக் சுப்பராஜின் 10-வது பட நாயகியாகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்
டோரத்திImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Aug 2026 11:28 AM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். தமிழ் சினிமாவில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் இயக்குநராக தனது வாழ்க்கையை தொடங்கினார். தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட மற்றும் மகான் என பலப் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் ரெட்ரோ. நடிகர் சூர்யா நாயகனாக நடித்த இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குநராக மட்டும் இன்றி தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.

இயக்குநராக ஹிட் படங்களை கொடுக்கும் கார்த்திக் சுப்பராஜ் தனது தயாரிப்பு நிறுவனம் சார்பாக படங்களை தயாரித்து வருகிறார். தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களை இயக்கி வரும் கார்த்திக் சுப்பராஜ் தனது இயக்கத்தில் 10-வதாக உருவாக உள்ள படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அந்த அப்டேட் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கார்த்திக் சுப்பராஜ் பட நாயகியாகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்:

அதன்படி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 10-வது படமாக உருவாக உள்ள படத்திற்கு டோரத்தி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்க அவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர்  நடிக்க உள்ளனர். மேலும் இந்தப் படத்தின் போஸ்டரைப் பார்க்கும் போது இந்தப் படம் நாயகியை மையமாக வைத்து உருவாக உள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… விஸ்வநாத் & சன்ஸ் படத்திலிருந்து The One Rule பாடல் வைரலாகி வருகின்றது

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தனது எக்ஸ் பக்கத்தில் திடீரென திருக்குறள் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் – அர்த்தம் என்ன தெரியுமா?

Follow Us