AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நடிகர் கிருஷ்ணாவில் 25-வது படத்தின் போஸ்டரை வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜ்

Director Karthik Subbaraj unveils Film Murder In Town | தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் கிருஷ்ணா. இவரது நடிப்பில் 25-வதாக உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் படத்தின் போஸ்டரை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டுள்ளார்.

நடிகர் கிருஷ்ணாவில் 25-வது படத்தின் போஸ்டரை வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜ்
மர்டர் இன் டவுன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Aug 2026 12:14 PM IST

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக வலம் வருபவர் நடிகர் கிருஷ்ணா. இவர் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற அஞ்சலி என்ற படத்தில் நடித்த பல குழந்தைகளில் ஒருவராக கிருஷ்ணா நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகர் கிருஷ்ணா தமிழ் சினிமாவில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான அலிபாபா என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நாயகனாக அறிமுகம் ஆன கிருஷ்ணா தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் கிருஷ்ணா நடிப்பில் அடுத்தடுத்து பலப் படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்களில் நடிப்பது மட்டும் இன்றி அடுத்தடுத்து தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார் கிருஷ்ணா. இவரது நடிப்பில் இறுதியாக கடந்த 2024-ம் ஆண்டு படம் வெளியான நிலையில் அதன் பிறகு தற்போது புதுப் படத்தின் அப்டேட் வெளியாகி ரசிகர்கள்டிஐயே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கிருஷ்ணா படத்தின் போஸ்டரை வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜ்:

இதுவரை நடிகர் கிருஷ்ணா மொத்தம் 24 படங்களில் நடித்து முடித்து உள்ள நிலையில் அடுத்ததாக 25-வது படத்தின் அப்டேட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்தப் படத்திற்கு மர்டர் இன் டவுன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் இரண்டு லுக்குகளையும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… இணையத்தில் 2 மில்லியன் பார்வைகளைக் கடந்தது சர்தார் 2 பட டீசர்

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இணையத்தில் வைரலாகும் நடிகர் சிவகார்த்திகேயனின் ரீசென்ட் லுக்!

Follow Us