AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தீபாவளி பண்டிகை.. சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு! இரண்டு நாட்களுக்கு சிறப்பு ஏற்பாடு..

Metro Rail Service: பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பயணிகளின் கூட்டம் அதிகரிக்கும். இந்த நிலையில், பொதுமக்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நவம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கூடுதல் சேவைகளை அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை.. சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு! இரண்டு நாட்களுக்கு சிறப்பு ஏற்பாடு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 05 Nov 2026 19:59 PM IST

நவம்பர் 5, 2026: சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, சென்னை மெட்ரோ ரயில் சேவையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, நவம்பர் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாட்களிலும் கூடுதல் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. குறிப்பாக, பயணிகளின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு மாலை நேர மெட்ரோ ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், நவம்பர் 6ஆம் தேதி நள்ளிரவு வரையிலும் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தீபாவளியை முன்னிட்டு கூடுதல் மெட்ரோ சேவை

நடப்பாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பயணிகளின் கூட்டம் அதிகரிக்கும். இந்த நிலையில், பொதுமக்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நவம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கூடுதல் சேவைகளை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க: தீபாவளி பண்டிகை.. விண்ணை முட்டும் விமான கட்டணம்.. சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

நவம்பர் 5ஆம் தேதி மெட்ரோ ரயில் நேரம்

இன்று (நவம்பர் 5, வியாழக்கிழமை) பச்சை, நீலம் மற்றும் மஞ்சள் வழித்தடங்களில் மாலை நேர நெரிசல் மிகுந்த நேரங்களுக்கான (Peak Hours) மெட்ரோ ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட உள்ளன. அதன்படி, வழக்கமாக இரவு 8 மணியுடன் நிறைவடையும் இந்தச் சேவைகள், இன்று இரவு 9 மணி வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 6ஆம் தேதி கூடுதல் சேவைகள்

நாளை (நவம்பர் 6, வெள்ளிக்கிழமை) மாலை நேர நெரிசல் மிகுந்த நேரங்களுக்கான மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கத்தை விட ஒரு மணி நேரம் முன்னதாகத் தொடங்கும். அதாவது, வழக்கமாக மாலை 5 மணிக்குத் தொடங்கும் சேவைகள் நாளை மாலை 4 மணிக்கே தொடங்கும். அதேபோல், இரவு 8 மணியுடன் நிறைவடையும் சேவைகள் இரவு 9 மணி வரை நீட்டிக்கப்படும்.

மேலும் படிக்க: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து திடீர் அதிகரிப்பு.. 5,586 கனஅடியிலிருந்து 7,041 கனஅடியாக உயர்வு..

நள்ளிரவு வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள்!

மேலும், நவம்பர் 6ஆம் தேதி முனைய நிலையங்களில் இருந்து புறப்படும் கடைசி மெட்ரோ ரயில்களின் நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பச்சை மற்றும் நீல வழித்தடங்களில் வழக்கமாக இரவு 11 மணிக்குப் புறப்படும் கடைசி மெட்ரோ ரயில், நாளை நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும். அதேபோல், மஞ்சள் வழித்தடத்தில் வழக்கமாக இரவு 9 மணிக்குப் புறப்படும் கடைசி ரயில், நாளை இரவு 11 மணி வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றியமைக்கப்பட்ட கால அட்டவணை நவம்பர் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். எனவே, பயணிகள் இந்த நேர மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு தங்களது பயணத்தைத் திட்டமிடுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Follow Us