AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தீபாவளி பண்டிகை.. விண்ணை முட்டும் விமான கட்டணம்.. சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

Chennai Airfare Hike : தீபாவளி பண்டியையொட்டி, சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கான விமான கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளது. இதில், எவ்வளவு கட்டணம் உயர்ந்துள்ளது என்ற விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம். அத்துடன், இந்த கட்டண உயர்வால் பொது மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர் .

தீபாவளி பண்டிகை.. விண்ணை முட்டும் விமான கட்டணம்.. சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 05 Nov 2026 18:01 PM IST

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல, விமானங்களிலும் தங்களது சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கான விமான கட்டணம் உயர்வு

தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் நாளை வெள்ளிக்கிழமை ( நவம்பர் 6- ஆம் தேதி) முதல் பயணம் மேற்கொள்வார்கள். இதற்காக அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. இதன் காரணமாக, பலர் சொந்த ஊருக்கு செல்வதற்காக விமானங்களில் பயணம் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். அதன் காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் முக்கிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதில்,

மேலும் படிக்க: சட்டம் அனைவருக்கும் சமம்! முதல்வர் விஜய்- ஜெகன்மோகன் ரெட்டி பேனர் அகற்றம்.. சென்னை மாநகராட்சி நடவடிக்கை!

  • சென்னை டூ தூத்துக்குடி விமான கட்டணம் ரூ. 17,363 ஆக உயர்ந்துள்ளது.
  • சென்னை டூ மதுரைக்கு ரூ. 10, 000. ( அதிகபட்ச கட்டணம் ரூ. 19,000).
  • இந்த கட்டணம் உயர்வு நாளை மறுநாள் சனிக்கிழமை ( நவம்பர் 7- ஆம் தேதி) வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமான கட்டணம் உயர்வை பொருட்படுத்தாத மக்கள்

விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்த போதிலும், சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் பயணிகள் விலை உயர்வை பொருட்படுத்தாமல், விமான டிக்கெட்டுகளை ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர். இதன் காரணமாக நாளை வெள்ளிக்கிழமை பயணத்துக்கான விமானங்களில் ஒரு சில டிக்கெட்டுகளே எஞ்சி இருந்தது. அந்த டிக்கெட்டுகளும் சில மணி நேரங்களில் விற்று தீர்ந்து விட்டன.

வெளி மாநில விமான கட்டணத்தில் பெரிய மாற்றமில்லை

அதே வேளையில், சென்னையில் இருந்து ஹைதராபாத், கொச்சி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் கட்டணத்தில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை. குறிப்பாக, தென் மாநிலங்களில் உள்ள நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் மட்டுமே கட்டண உயர்வு உச்சத்தை எட்டி உள்ளது.

மேலும் படிக்க: கிருஷ்ணகிரியில் பயங்கரம்… தொழிற்சாலை கட்டடம் இடிந்து விபத்து.. இடிபாடில் சிக்கி 3 பேர் பலி!

Follow Us