AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஏ சான்றிதழால் வசூலில் வசூலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது – ஜன நாயகன் தயாரிப்பாளர்

Producer talks about Jana Nayagan movie box office collection | ஜன நாயகன் படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்ததன் காரணமாக படத்தின் வசூலில் பெரிய தாக்கம் ஏற்பட்டதாக படத்தின் தயாரிப்பாளர் வெங்கர் நாராயணன் பேட்டி ஒன்றில் பேசியது வைரலாகி வருகின்றது.

ஏ சான்றிதழால் வசூலில் வசூலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது – ஜன நாயகன் தயாரிப்பாளர்
ஜன நாயகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Aug 2026 15:31 PM IST

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி தற்போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் ஜன நாயகன். இந்தப் படம் பல தடைகளைத் தாண்டி திரையரங்குகளில் வெளியான நிலையில் அவரது ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர். ஒரு பக்கம் அவரது ரசிகர்கள் அந்தப் படத்தை கொண்டாடி வந்தாலும் தளபதி விஜய்க்கு குட்டி குழந்தைகளில் இருந்து வயது முதிர்ந்தவர்கள் வரை ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இப்படி இருக்கும் சூழலில் ஜன நாயகன் படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்ட காரணத்தால் இந்தப் படத்தை 18 வயதிற்கு அதிகமானவர்களே பார்க்க முடியும் என்ற கட்டுபாடு உள்ளது. இது தளபதி விஜயின் குட்டி நண்பா நண்பீஸ்கு ஒரு பக்கம் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

பல குட்டி குழந்தைகள் தங்களது வீட்டில் உள்ள பெற்றோர்களிடம் அடம் பிடித்து அழுகும் வீடியோ அதிக அளவில் சமூக வலைதளத்தில் பரவி வருவதை நாம் பார்த்து இருப்போம். இப்படி இருக்கும் நிலையில் இந்த ஏ சான்றிதழ் காரணமாக ஜன நாயகன் படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணன் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஏ சான்றிதழால் வசூலில் வசூலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது:

இப்படத்தில் பாதுகாப்பு, ராணுவம் மற்றும் மதம் சார்ந்த சில அம்சங்கள் இடம்பெற்றுள்ளதால், அவை பல்வேறு நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட வேண்டியிருந்தது. ஆய்வுக்கான குழு அந்த அம்சங்களை முழுமையாகப் பரிசீலித்து, அதற்கேற்ப சில காட்சிகளை நீக்குமாறு பரிந்துரைத்தது அந்த அம்சங்கள் எதையும் கவனிக்காமல் விட்டுவிடவில்லை. படத்தைப் பார்த்த பின்னரே அதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இது சற்று உணர்வுபூர்வமான விஷயம், ஏனெனில் இது மனவேதனையை அளிக்கிறது. வன்முறைக் காட்சிகள் தொடர்பாக முந்தைய படங்களை நாங்கள் ஒரு முன்மாதிரியாகக் கொண்டு, அதே பாணியில் எங்கள் படத்திலும் அத்தகைய கூறுகளைச் சேர்த்தோம். ஆனால், அது அந்த விதத்தில் அணுகப்படவில்லை. தணிக்கைக் குழு (CBFC) ஒவ்வொரு படத்தையும் தனித்தனியாகவே மதிப்பீடு செய்கிறது.

‘U/A’ சான்றிதழுக்குப் பதிலாக ‘A’ சான்றிதழ் கிடைப்பது படத்தின் வசூலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நாங்கள் எப்போதும் சட்டத்திற்கு உட்பட்டே செயல்பட விரும்பினோம். தணிக்கைச் சான்றிதழ் பெற்ற பின்னரே படங்களை வெளியிட வேண்டும் என்பது சட்ட விதிமுறையாகும் என்றும் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Also Read… பிரபல நடிகரின் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடும் நடிகை கீர்த்தி சுரேஷ்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Madhampatty Rangaraj: ராகா ரங்கராஜின் முழு பொறுப்பையும் ஏற்கிறேன்.. மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட பதிவு!

Follow Us